புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய போது, ”ஓட்டபிடாரம் தொகுதியில் வேட்பாளராக போட்டியிடும் நான் இத்தொகுதிக்கான பிரத்யேக தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளேன்.
அதன்படி, தொகுதியில் ஏழை விவசாய மக்களை ஏமாற்றி காற்றாலைகளுக்காக அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டுத் தரப்படும். இனி ஒருவரின் நிலமும் அந்நியரால் அபகரிக்கப்படாது.
ஓட்டபிடாரத்தில் திமுக சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் வேட்பாளர் விவசாயிகளிடம், மக்களிடம் இருந்து நிலத்தை அபகரித்து காற்றாலைகளுக்கு விற்றவர். அதிமுக வேட்பாளர் தொகுதிக்குட்பட்ட வாய்க்கால்கள், கண்மாய்கள் உள்ளிட்டவைகளில் இயற்கை வளங்களை சுரண்டி கொள்ளையடித்தவர்.
ஆனால், நான் எவ்வித ஊழல் குற்றச்சாட்டுக்கும் ஆளாகாதவன். சட்டமன்ற உறுப்பினராக பணியாற்றிய காலங்களில் மக்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளேன்” என்றார்.
இதையும் படிங்க: பொள்ளாச்சி வழக்கில் நியாயம் கிடைக்க ஸ்டாலின் முதல்வராக வேண்டும்!