தூத்துக்குடி மாவட்ட அதிமுக ஊராட்சித்தலைவி சத்யா மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை திமுக மாவட்ட கவுன்சிலர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டுவந்தனர். இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்ட ஆட்சித்தலைவர் செந்தில்ராஜ் முன்னிலையில் வாக்கெடுப்பு நடைபெற்றது.
மொத்தம் 17 மாவட்ட கவுன்சிலர்கள் உள்ளனர்; இதில் மாவட்ட ஊராட்சித்தலைவி அதிமுகவைச் சேர்ந்த சத்யா உள்ளிட்ட மூன்று மாவட்ட கவுன்சிலர்கள் இந்த வாக்கெடுப்பில் பங்கு பெறவில்லை. இந்த வாக்கெடுப்பில் கலந்துகொண்ட 14 மாவட்ட கவுன்சிலர்களும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை ஆதரித்து வாக்களித்தனர். இதைத்தொடர்ந்து, அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட பஞ்சாயத்து தலைவி சத்யா பதவியை இழந்தார்.
இது குறித்த தகவல்களை தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் மாநிலத் தேர்தல் ஆணையத்திற்கு தெரிவிக்கும், இதைத்தொடர்ந்து மாநில தேர்தல் ஆணையம் மீண்டும் மாவட்ட ஊராட்சித்தலைவி பதவிக்கான மறைமுக தேர்தலை நடத்த அறிவிப்புகள் வெளியிடும் எனத் தெரிகிறது.
இந்நிலையில் மாவட்ட பஞ்சாயத்து தலைவி பதவிக்கு, திமுக சார்பில் போட்டியிடக்கூடிய மாவட்ட கவுன்சிலர் வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளது.
இதையும் படிங்க: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நான்காம் கட்ட பேச்சுவார்த்தை