தூத்துக்குடி பழைய துறைமுகத்திலிருந்து இலங்கை, மாலத்தீவு உள்ளிட்ட அண்டை நாடுகளுக்கு இந்தியப் பொருள்கள் தோணி மூலம் கொண்டுசெல்லப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த ஆர்.கார்ப் வேல்டு என்ற தோணி வெங்காயம், கட்டுமான பொருள்களை ஏற்றிக்கொண்டு மாலத்தீவு நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றது.
மாலுமி ஜெயச்சந்திரன் தலைமையில் ஒன்பது பேர் தோணியில் பயணம் செய்தனர். இந்நிலையில் 21ஆம் தேதி நள்ளிரவு மூன்று மணியளவில் தோணியானது மாலத்தீவிலிருந்து வடக்கே 116 கடல் மைல் தொலைவில் சென்றபோது நடுக்கடலில் பெய்த கனமழை, காற்றின் வேகத்தினால் கடல் சீற்றம் ஏற்பட்டுள்ளது.
அப்போது, கடல் சீற்றத்தில் தோணி சரக்குகளுடன் கடலில் மூழ்கியது. அதில் சென்ற ஜெயச்சந்திரன், ஜோசப் லினஷ், சுரேஷ், டேவிட் ராஜா, உல்சடன் கிளைட்டன், ராஜேஸ், செல்வம், விஜிலேஷ், மைக்கேல் உள்ளிட்ட ஒன்பது மாலுமிகள் செய்வதறியாது கடலில் தத்தளித்துள்ளனர்.
அந்தப் பகுதியில் சிறிது நேரத்தில் தூத்துக்குடி நோக்கிப் பயணித்த வி.பி. பிராக்கர்ஸ் என்ற கப்பல் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களை மீட்டது. இதைத்தொடர்ந்து மீட்கப்பட்ட ஒன்பது பேருடன் வி.பி. பிராக்கர்ஸ் கப்பல் இன்று தூத்துக்குடி பழைய துறைமுகம் வந்தது.
பின்னர் ஒன்பது பேரும் கடலோரக் காவல் குழுமத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் காவல் துறையினர், வெளியுறவுத் துறையினர் விசாரணை செய்த பிறகு ஒன்பது பேரும் அவர்களது வீட்டிற்கு அனுப்பப்பட்டார்கள்.
இதையும் படிங்க: மாமனார் மீது பாய்ந்த மின்சாரம்... காப்பாற்ற முயன்ற மருமகள் உயிரிழப்பு!