ETV Bharat / state

வில்சன் கொலை வழக்கு - அதிரடி சோதனையில் என்.ஐ.ஏ; பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்கள் - சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு

தூத்துக்குடி: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கில் தமிழ்நாட்டில் பல இடங்களில் என்.ஐ.ஏ ( தேசிய புலனாய்வு முகமை) அலுவலர்கள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

nia officers raid at kayalpattinam
nia officers raid at kayalpattinam
author img

By

Published : Feb 24, 2020, 2:59 PM IST

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையைச் சேர்ந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன், கடந்த ஜனவரி எட்டாம் தேதி இரவு 9.30 மணிக்கு களியக்காவிளை அருகிலுள்ள சோதனைச் சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது மர்ம கும்பலால் துப்பாக்கியால் சுடப்பட்டும், கத்தியால் குத்தப்பட்டும் கொலை செய்யப்பட்டார்.

இதுதொடர்பாக அப்துல் சமீம், தெளஃபீக் ஆகியோரை ஜனவரி 14ஆம் தேதி தனிப்படை காவல் துறையினர் கைது செய்து, விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்குத் தொடர்பாக இருவரையும் பல பகுதிகளில் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வந்தனர்.

வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்கள், பயங்கரவாதிகளுடன் தொடர்பு இருந்தது தெரிய வந்ததால், இருவர் மீதும் என்.ஐ.ஏ அலுவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர். இந்நிலையில், இவ்வழக்கை என்.ஐ.ஏவுக்கு மாற்ற அனுமதி கேட்டு தமிழ்நாடு அரசு, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவிற்கு அனுமதி அளிக்கப்பட்டதன் பேரில், என்.ஐ.ஏவுக்கு இந்த வழக்கு மாற்றப்பட்டது.

இதைத் தொடர்ந்து, கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் என்.ஐ.ஏ பிரிவு அலுவலர்களிடம், இவ்வழக்குத் தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் சமர்ப்பித்தனர்.

nia officers raid at kayalpattinam
செய்யது அலிநவாஸ் என்பவரின் இரண்டாவது மனைவி மொய்தீன் பாத்திமாவின் வீட்டில் சோதனை

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம், சென்னை, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் தெளஃபீக்கின் நண்பரான செய்யது அலிநவாஸ் என்பவரின் இரண்டாவது மனைவி மொய்தீன் பாத்திமாவின் வீட்டில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

தெளஃபீக், சமீம் உள்ளிட்ட ஆறு பேர் இங்கு தங்கிவிட்டுச் சென்றதாக கிடைத்த தகவலின்படி, ஏற்கெனவே கடந்த ஜனவரி 26ஆம் தேதி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், என்.ஐ.ஏ அலுவலர்கள் மூன்று பேர் கொண்ட குழுவினர் இன்று காலை சுமார் 6 மணி முதல் இரண்டு மணி நேரம் பாத்திமாவின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். இதில், மூன்று சிம்கார்டு அட்டைகள், வங்கியில் பண பரிவர்த்தனை மேற்கொண்டதற்கான ரசீதுகள், மொய்தீன் பாத்திமாவின் முதல் கணவரான சாசுதீனின் புகைப்படம் உள்ளிட்டவற்றை அலுவலர்கள் கைப்பற்றியுள்ளனர். இச்சோதனையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

nia officers raid at kayalpattinam
என்.ஐ.ஏ அலுவலர்கள் திடீர் சோதனை

இதையும் படிங்க: சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் கொலை வழக்கு - 4 இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.