ETV Bharat / state

தூத்துக்குடி விஜயாசனப் பெருமாள் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம் - தூத்துக்குடி மாவட்ட செய்தி

தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற நவதிருப்பதி கோயில்களில் ஒன்றான நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

author img

By

Published : Feb 14, 2023, 4:00 PM IST

நத்தம் விஜயாசனப் பெருமாள் கோயில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

தூத்துக்குடி: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், தூத்துக்குடி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற நவதிருப்பதி தலங்களில் இரண்டாவது தலமாக விளங்கும் நத்தம் ஸ்ரீ விஜயாசன பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசி பிரம்மோத்ஸவம் திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி, இந்தாண்டுக்கான திருவிழா நேற்று திருமுளைச்சாத்துடன் துவங்கிய நிலையில் வரும் 24ஆம் தேதி வரை திருவிழா நடக்கிறது. திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு திருமஞ்சனம், நித்திய கோஷ்டி நடந்தது. தொடர்ந்து காலை 10.30 மணிக்கு கொடி பட்டம் கோவில் வளாகத்தைச் சுற்றி வரப்பட்டு காலை 11 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

கொடியேற்றத்தைத் தொடர்ந்து திருவிழா நாட்களில் தினமும் காலை 9 மணிக்கு பெருமாள் தோளுக்கினியானில் திருவீதி புறப்பாடு, பகல் 11 மணிக்கு திருமஞ்சனம், தீர்த்த விநியோக கோஷ்டியும் நடந்தது.

இதைப்போல் தினமும் மாலை 6 மணிக்கு பெருமாள் ஹம்ஸ வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்தம், சேஷம், யானை, இந்திர விமானம், சந்திரபிரபை, பரங்கி நாற்காலி, குதிரை, வெற்றிவேர் சப்பரம் ஆகிய வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வருகிறார்.

திருவிழாவின் 6ஆம் நாளான 18ஆம் தேதி மாலை 6 மணிக்கு எம் இடர் கடிவான் பெருமாள் கருட சேவையும், 8ஆம் நாளான 20ஆம் தேதி மதியம் 2 மணி முதல் மாலை 5 மணிக்கு திருக்கல்யாணம், 24ஆம் தேதி காலை 11 மணிக்கு புஷ்ப யாகத்துடன் திருவிழா நிறைவடைகிறது. திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: பிரபாகரன் விவகாரத்தில் புரளியை கிளப்பக்கூடாது - திலகபாமா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.