தூத்துக்குடி மாவட்டம் செய்துங்கநல்லூர் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் இரு சமுதாயத்தினர் இடையே ஏற்பட்ட தகராறு தொடர்பாக ஒரு பிரிவினரிடம் செய்துங்கநல்லூர் காவல்துறையினர் இன்று விசாரணை நடத்தினர். இதனால், மனமுடைந்த முத்தாலங்குறிச்சியைச் சேர்ந்த மாரியப்பன் என்பவரது மனைவி சங்கரம்மாள்(37), அவரது மகள் ஐஸ்வர்யா(16) ஆகிய இருவரும் விஷம் குடித்தனர்.
இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். தற்போது தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சங்கரம்மாள் உறவினர்கள் காவல்துறையினரை கண்டித்து செய்துங்கநல்லூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரீவைகுண்டம் தாசில்தார் சந்திரன், ஏடிஎஸ்பி பழனிகுமார் உள்ளிட்டோர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்டபின் போராட்டக்காரர்கள் கலைந்துச் சென்றனர்.
இதையும் படிங்க: மலபார் கடற்படை கூட்டு பயிற்சிகளில் சேர இந்தியா ஆஸ்திரேலியாவை அழைக்க வாய்ப்பு