தூத்துக்குடியில் சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவும், குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ. 9 ஆயிரம் வழங்கிட கோரியும், உணவு மானியத்தை உயர்த்த வேண்டும், சத்துணவு மையங்களை மூடுவதை கைவிட கோரியும், காலிபணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.
இப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் பொன்சேகர், அரசு ஊழியர் சங்க மாநில துணை தலைவர் வெங்கடேசன், மாவட்ட தலைவர் செந்தூர்ராஜன், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முருகன், சத்துணவு ஊழியர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
பாளை., ரோட்டிலுள்ள அரசு ஊழியர் சங்க அலுவலகத்திலிருந்து, புதிய மாநகராட்சி அலுவலகம் நோக்கி புறப்பட்ட 286 பெண்கள் உட்பட 316 சத்துணவு ஊழியர்களை நகர காவல் அலுவலர் பிரகாஷ் தலைமையிலான காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
இதையும் படிங்க: சத்துணவு ஊழியர்கள் 20 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்!