ETV Bharat / state

மோடி இயக்கும் பொம்மைகளாக அமைச்சர்கள் இருக்கின்றனர்- சஞ்சய்தத் விமர்சனம் - இயக்கும் பொம்மைகள்

தூத்துக்குடி: பிரதமர் மோடி டெல்லியில் இருந்து பொம்மைகள் போல் தமிழக அமைச்சர்களை இயக்கி வருகிறார் என காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் விமர்சனம் செய்துள்ளார்.

சஞ்சய்தத் விமர்சனம்
author img

By

Published : Apr 28, 2019, 11:16 PM IST

தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளர் சஞ்சய்தத் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது, முதலில் தூத்துக்குடி மக்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும்.

ஏனெனில் நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்கள் என்ற செய்தியை எங்களுக்கு தரப்போகிறார்கள்.

மேலும் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கொண்டு பொம்மைகளை போல் தமிழக அமைச்சர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார். அவர் போடும் தாளங்களுக்கு ஆடும் நபர்களாக தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வமும் செயல்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் திமுக வேட்பாளர் சண்முகையா போட்டியிடுகிறார். திமுக வேட்பாளர் சண்முகையாவுக்கு வாக்கு சேகரிக்கும் பொருட்டு காங்கிரஸ் கட்சி செயல்வீரர்கள் கூட்டம் தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக அகில இந்திய காங்கிரஸ் செயலாளர் சஞ்சய் தத் கலந்து கொண்டு பேசினார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முதலில் தூத்துக்குடி மக்களுக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலிலும், சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலிலும் காங்கிரஸ் - திமுக தலைமையிலான கூட்டணி கட்சி வேட்பாளர்கள் மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் அடிப்படையில் வெற்றி பெற்றார்கள் என்ற அறிவிப்பு வெளியாக உள்ளது. தூத்துக்குடியில் பாராளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் கனிமொழி தொடர்ந்து இந்த வெற்றியானது ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் சண்முகையா மூலமும்  நமக்கு கிடைக்கப்போகிறது. தமிழ்நாட்டு மக்களும் திமுக காங்கிரஸ் தலைமையில் கூட்டணி தலைமையிலான வேட்பாளர்கள் தான் வெற்றி பெற வேண்டும் என நினைக்கின்றனர். அதற்கு ஏற்றார் போல் மத்தியில் ராகுல் காந்தி பிரதமராக வந்து அமரப் போகிறார். அதேபோல் தமிழகத்தில் திமுக தலைவர் மு க ஸ்டாலின் தான் முதலமைச்சராக வரப்போகிறார்.

எங்களது கழகத் தொண்டர்களும் கூட்டணி கட்சித் தொண்டர்களும் இரவு பகலாக இந்த தேர்தல் வெற்றிக்காக பாடுபட்டு கொண்டிருக்கிறார்கள். நான் ஏற்கனவே சூலூர், அரவக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பணிகளை மேற்பார்வையிட்டுருக்கிறேன். அதுபோல் இன்று ஓட்டப்பிடாரத்திலும் அதைத்தொடர்ந்து மதுரை திருப்பரங்குன்றம் தொகுதியிலும் தேர்தல் பணிகளை மேற்பார்வையிட உள்ளேன்.

தமிழக மக்கள், மத்திய அரசின் செயல்பாடுகளால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து கொண்டு தமிழக அமைச்சர்களை இயக்கிக் கொண்டிருக்கிறார்.
பிரதமர் நரேந்திர மோடி போடும் தாளங்களுக்கு ஆடும் நபர்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் செயல்படுகிறார்கள்.
தமிழக மக்கள் அவமானப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இதனால் தமிழக மக்களின் தன்மானம் ஆனது பாதிக்கப்பட்டு உள்ளது.

ஆகவே மத்திய அரசின் மீதான கோபத்தை தமிழக மக்கள் தேர்தல் மூலமாக தேர்தல் மூலமாக வெளிப்படுத்துவார்கள். நடைபெற்று முடிந்த 40 பாராளுமன்ற தொகுதி தேர்தல் மற்றும் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் ஆகியவற்றிலும் தற்போது நடைபெற உள்ள சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் உள்ளிட்டவற்றிலும் காங்கிரஸ் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றி மிகப்பெரிய வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறும். நாற்பதும் நமதே நாடும் நமதே என்றார்.

News in mail

Visual FTP.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.