கரோனா வைரஸ் பரவி வருவதை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றன.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளின்றி வெளியில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மருத்துவர்களும், காவலர்களும், தூய்மை பணியாளர்களும், பத்திரிக்கையாளர்களும் தொடர்ந்து மக்கள் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
![காவல் துறையினருக்கு மரியாதை செலுத்திய மக்கள் நீதி மய்யம் கட்சியினர்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-tut-03-mnm-party-honor-police-vis-script-7204870_05042020131135_0504f_1586072495_1049.png)
இந்நிலையில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் அறிவுறுத்தலின் பேரில் தூத்துக்குடியில் காவலர்கள், தூய்மை பணியாளர்களை கௌரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாநகர செயலாளர் ராஜா தலைமையிலான ம.நீ.ம.வினர் விரிவாக்கம் செய்யப்பட்ட காய்கனி அங்காடி பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறை கண்காணிப்பாளர் பிரகாஷ், மத்தியபாகம் ஆய்வாளர் ஜெயபிரகாஷ், உதவி ஆய்வாளர் சங்கர் உள்ளிட்ட காவல் துறையினருக்கு மெழுகுவர்த்தி ஏந்தி மாலை அணிவித்தும் அவர்கள் கால்களில் விழுந்து வணங்கியும் நன்றியினை தெரிவித்தனர்.
மேலும் சுமார் 40க்கும் மேற்பட்ட மாநகராட்சி தூய்மை பணியாளர்களை அவர்கள் பணிரியும் பகுதிக்குச் சென்று அவர்கள் கால்களை மஞ்சள் தண்ணிரால் கழுவி மரியாதை செய்தனர். மேலும், அவர்களுக்கு சுமார் 20 ஆயிரம் மதிப்பிலான காய்கறிப் பைகளை வழங்கி கௌரவித்தனர்.
இதையும் படிங்க: கரோனாவைக் கட்டுப்படுத்தும் வல்லமை கபசுரக் கசாயத்திற்கு உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்