ETV Bharat / state

ரூ.25 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள்  வழங்கல்! - Medical equipments

தூத்துக்குடி: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு ரூ.25 லட்சம் மதிப்பில் கூடுதல் மருத்துவ உபகரணங்களை சட்டப்பேரவை உறுப்பினர் நல நிதியிலிருந்து எம்.எல்.ஏ., கீதாஜீவன்‌ வழங்கினார்.

MLA Geetha jeevan provided 25 lakh worth medical equipment

author img

By

Published : Sep 10, 2020, 4:48 PM IST

தூத்துக்குடியில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நாள்தோறும் ஏராளமானோர் வெளிநோயாளிகளாகவும், உள்நோயாளிகளாகவும் சேர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இந்நிலையில் உள்நோயாளியாக சிகிச்சை பெறுபவர்களுக்கு கூடுதல் படுக்கைகள், மருத்துவ உபகரணங்கள் பெற்றுத்தருமாறு மருத்துவக் கல்லூரி நிர்வாகத்தினர் எம்.எல்.ஏ., கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைப் பரிசீலித்த அவர், சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் நல நிதியிலிருந்து ரூ.25 லட்சம் மதிப்பில் நவீன படுக்கைகள், மருத்துவ உபகரணங்களை வாங்கி தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உறைவிட மருத்துவர் சைலஸ் ஜெபமணி, மருத்துவர் மகிழ் ஜான் சந்தோஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.