ETV Bharat / state

இளைஞர்களின் நேர்மையை பாராட்டிய தூத்துக்குடி எஸ்.பி..! - SP Jayakumar

தூத்துக்குடி: ஐந்து சவரன் நகையுடன் கீழே கிடந்த பணப்பையை எடுத்து மனித நேயத்துடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு எஸ்.பி ஜெயக்குமார் பரிசு வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

எஸ்.பி ஜெயக்குமார்  தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார் பாராட்டு  Missing Money Bag  Missing Money Bag Handover  Thoothukudi SP Jayakumar Praise  SP Jayakumar  Missing Money Bag Handover Thoothukudi SP Jayakumar Praise
Thoothukudi SP Jayakumar Praise
author img

By

Published : Nov 30, 2020, 10:43 PM IST

Updated : Dec 1, 2020, 7:19 AM IST

தூத்துக்குடி, தட்டாப்பாறை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கீழசெக்காரக்குடி பேருந்து நிறுத்தத்தில், கோரம்பள்ளம் மாதவன் நகரைச் சேர்ந்த கருப்பசாமி என்பவர் தான் வைத்திருந்த ஐந்து சவரன் தங்க நகையுடன் கூடிய பணப்பையை தவறவிட்டுச் சென்றுள்ளார்.

அப்போது, அவ்வழியாக வந்த கீழசெக்காரக்குடி வடக்கு தெருவைச் சேர்ந்த பிச்சாண்டி (வயது 27), ஆறுமுகம் ( வயது 26) ஆகிய இருவரும் அந்தப் பையை எடுத்து மனித நேயத்துடன், நேர்மையான முறையில் தட்டாப்பாறை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இந்நிலையில், தூத்துக்குடி எஸ்.பி ஜெயக்குமார், மீட்கப்பட்ட பணப்பையை அதன் உரிமையாளரான கருப்பசாமியிடம் ஒப்படைத்தார். மேலும், கீழே கிடந்த பணப்பையை நேர்மையுடன் காவல் நிலையத்தில் ஒப்படைத்த பிச்சாண்டி, ஆறுமுகம் ஆகிய இருவருக்கும் எஸ்.பி ஜெயக்குமார் பொன்னாடை அணிவித்து பரிசு வழங்கி பாராட்டினார்.

இதையும் படிங்க: மருத்துவம் பயிலவுள்ள மாணவர்களுக்கு பாராட்டு தெரிவித்த அமைச்சர்

Last Updated : Dec 1, 2020, 7:19 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.