தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள தனியார் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 24ஆவது ஆண்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசுகையில், "கடந்த 8 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 67 கலைக்கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரையில், தமிழ்நாட்டில் உயர் கல்வி துறையில் 50 விழுக்காட்டை தாண்டிய மாநிலமாக உருவெடுத்துள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு காலத்தில் பெண் கல்வி என்பது ஏக்க கனவாக இருந்தது. எட்டும் அறிவினில் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என கவிஞர் பாரதியார் பாடினார்.
ஆனால், இன்றைக்கு பாரதியார் இருந்தால் பெண்ணுக்கு இங்கே ஆண் இளைப்பில்லை காண் என்று கும்மியடி என மாற்றி பாடி இருப்பார். அந்த அளவிற்கு பெண் கல்வியை தமிழ்நாடு அரசு தந்துள்ளது" என்றார்.
இதையும் படிங்க: நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எப்போது? முதியவர் தீ குளிக்க முயற்சி