ETV Bharat / state

'திமுக தலைவர் ஸ்டாலின் இன்னும் வெளிச்சத்துக்கு வரவில்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜூ - தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி

தூத்துக்குடி: திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தற்போது வரை வெளிச்சத்துக்கு வரவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சித்துள்ளார்.

minister_kadampur_raju
minister_kadampur_raju
author img

By

Published : Nov 29, 2020, 3:53 PM IST

2021 சட்டப்பேரவை தேர்தல் தொடர்பாக அதிமுக மகளிர் அணி குழு அமைப்பது குறித்த ஆலோசனைக் கூட்டம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே கழுகுமலையில் இன்று (நவம்பர் 29) நடைபெற்றது. இக்கூட்டத்தில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தலைமையில் 2021 சட்டப்பேரவைத் தேர்தலுக்கு மகளிர் பூத் கமிட்டி சிறப்பாக செயல்பட ஆலோசனைகளை வழங்கினார்.

இதில், அரசுப் பள்ளியில் பயின்று தேனி மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் 7.5 விழுக்காடு இட ஒதுக்கீட்டில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்த கழுகுமலையைச் சார்ந்த சுதா என்ற மாணவியை அமைச்சர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். மேலும், தனது சொந்த நிதியிலிருந்து 25 ஆயிரம் ரூபாயை மாணவியின் படிப்பு செலவுக்காக வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினர் சின்னப்பன் உள்பட அதிமுக நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

அதன் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ, "அரசின் சாதனைகளை மக்களிடம் கூறி அதிமுகவினர் வாக்கு கேட்போம், ஆனால் எதிர்க்கட்சியினர் வேதனையை கூறி வாக்கு கேட்பார்கள். அதிமுகவின் வாக்கு வங்கியை யாராலும் அசைக்க முடியாது.

திமுக தலைவர் ஸ்டாலின் தற்போது வரை வெளிச்சத்தை பார்க்கவில்லை. அவர் இருட்டில் தான் இருக்கிறார். திமுக ஆட்சியில் 12 மணி நேர மின்வெட்டு இருந்தது. அதிமுக கொடுத்த வெளிச்சமே போதும், திமுகவின் இருட்டு தேவையில்லை என மக்கள் தீர்மானித்து விட்டார்கள்", என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.