ETV Bharat / state

கேரளா நிலச்சரிவு: உயிரிழந்த தமிழர்களின் இல்லங்களில் அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் ஆறுதல்!

author img

By

Published : Aug 10, 2020, 9:47 PM IST

தூத்துக்குடி: கேரள மாநிலம், ராஜமலை அருகேயுள்ள பெட்டிமுடி என்னும் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.

minister kadampur raju
minister kadampur raju

கேரள மாநிலத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஆக.7) இடுக்கி மாவட்டம், ராஜமலைப் பகுதியில் கடும்நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் பெட்டிமுடி பகுதியில் தங்கியிருந்த கூலித்தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதில், பலர் தமிழ்நாட்டின் கயத்தாறு பாரதிநகரைச் சேர்ந்த தொழிலாளர்கள் என்பது தெரியவந்தது.

இந்நிலையில், கயத்தாறு பாரதிநகர் சென்ற அமைச்சர் கடம்பூர் ராஜூ, உயிரிழந்தோரின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். மேலும், பெற்றோரை இழந்து தவிக்கும் சரண்யா, அன்னலட்சுமி, விஜய் ஆகியோருக்கும் ஆறுதல் கூறினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, "இடுக்கி மாவட்டம், ராஜமலை பெட்டிமுடி தேயிலைத் தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவில் இன்று(ஆகஸ்ட் 10) காலை வரை 42 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில், 22 பேர் கயத்தாறு பாரதி நகரைச் சேர்ந்தவர்கள். கயத்தாறு பகுதியைச் சேர்ந்த 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்னும் 28 பேரைத் தேடும் பணி நடைபெறுவதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது.

பெற்றோரை இழந்து வாடும் சரண்யா, அன்னலட்சுமி மற்றும் தனது குடும்பத்தைச் சேர்ந்த 14 பேரை இழந்து தவிக்கும் விஜய் ஆகியோரின் நிலை குறித்து அரசுக்கு தெரிவித்து, கல்வித் தகுதிக்கேற்ப வேலை கிடைக்க ஏற்பாடு செய்யப்படும். உயிரிழந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு நிரந்தரமாக தங்குவதற்கு அரசு சார்பில் வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

'அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்'

கேரள மாநில அரசு அங்குள்ள நிலைக்கு ஏற்ப இ-பாஸ் தருகிறது. கயத்தாறைச் சேர்ந்தவர்கள் அங்கு செல்வதற்கு தமிழ்நாடு அரசு கேரள அரசிடம் கோரிக்கை வைத்து இ- பாஸ் பெற்றுத் தந்தது. நிலைமை சீரானவுடன், உயிரிழந்த தொழிலாளர்களுக்கு இறுதிச் சடங்குகள் செய்வதற்கு அரசு மூலம் இ-பாஸ் பெற்றுத் தருவது மட்டுமின்றி, வாகன வசதியும் செய்து தரப்படும்" என்றார்.

இதையும் படிங்க: புதிய வகை வெட்டுக்கிளி இனத்திற்கு கேரள ஆராய்ச்சியாளரின் பெயர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.