ETV Bharat / state

'கல்வியினையும் சுகாதாரத்தையும் 2 கண்களாக கருதுபவர் முதலமைச்சர்' - அமைச்சர் கீதாஜீவன்! - செவியர்களுக்கான பயிற்சி மையம்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை சமூக நலத்துறை அமைச்சர் கீதாஜீவன் தொடங்கி வைத்தார்.

Etv Bharat குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்

author img

By

Published : Aug 9, 2023, 4:43 PM IST

குடிநீர் சுத்திகரிப்பு மையத்தை தொடங்கி வைத்த அமைச்சர் கீதாஜீவன்

தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உடன் இணைந்து செவிலியர்களுக்கான பயிற்சிக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு படிக்கும் மாணவிகளுக்கு சுகாதாரமான குடிநீர் வழங்கும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு மையம் அமைத்துத்தர வேண்டும் என கல்லூரி நிர்வாகத்தினர் தூத்துக்குடி சட்டப்பேரவை உறுப்பினரும், சமூக நலத்துறை அமைச்சருமான கீதாஜீவனிடம் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து தனியார் பங்களிப்புடன் குடிநீர் சுத்திகரிப்பு மையம் 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் நிறுவப்பட்டது. இதன் செயல்பாடுகள் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி இன்று (ஆக.09) நடைபெற்றது. இதில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு குடிநீர் சுத்திகரிப்பு மையத்தின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுமார் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பெண்களுக்கான மார்பக புற்றுநோயை கண்டறியும் அதிநவீன கருவி நிறுவப்பட்டுள்ளது. இதன் செயல்பாடுகளையும் தொடங்கி வைத்தார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில், “தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கல்வியினையும் சுகாதாரத்தையும் இரண்டு கண்கள் என்ற வகையில் கருதி, பல்வேறு திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்.

இதன் காரணமாகத்தான் மருத்துவமனைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தூத்துக்குடி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதன் காரணமாக தூத்துக்குடி மாவட்டம் மட்டுமின்றி அண்டை மாவட்டங்களில் இருந்தும் இங்கு வந்து சிகிச்சைப் பெற்று செல்கிறார்கள். சிறப்பாகப் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எனது பாராட்டுகள்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: முதல் முறையாக ஹஜ் பயணம்:மானியத் தொகை வழங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.