ETV Bharat / state

100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான்

author img

By

Published : Apr 13, 2019, 5:21 PM IST

தூத்துக்குடி: மக்களவை மற்றும் இடைத்தேர்தல்களில் பொதுமக்கள் 100 விழுக்காடு வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

100 விழுக்காடு வாக்குப் பதிவை வலியுறுத்தி மினி மாரத்தான்

வருகிற 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தேர்தலில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி தூத்துக்குடி மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்று காலை மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை தூத்துக்குடி தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்துவைத்தார். முத்து நகர் கடற்கறையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மாரத்தான் போட்டி வி.ஈ.ரோடு வழியாக வ.உ.சி. கல்லூரி முன்பு முடிவடைந்தது.

இதில், தேர்தல் அலுவலர் சந்தீப் நந்தூரி, அவருடைய மனைவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, உதவி தேர்தல் அலுவலர் சிம்ரன் சிங், பயிற்சி ஆட்சியர் அனு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து, மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் உள்பட 200 பேர் கலந்துகொண்டனர்.

இது குறித்து பயிற்சி ஆட்சியர் அனு செய்தியாளர்களிடம் பேசுகையில், "தூத்துக்குடி மாவட்டத்தில் 100 வழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில், இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது.

இந்த மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி சிறியவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு வயதினரும் உற்சாகமாக கலந்துகொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மக்களவைத் தேர்தல் அமைதியான முறையில் 100 விழுக்காடு வாக்குப் பதிவு நடக்கவேண்டும்" என்றார்.

தூத்துக்குடி

வருகிற 18-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தல் ஆகியவற்றில் 100% பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மினி மாரத்தான் போட்டி நடைபெற்றது.

இந்த போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி கொடியசைத்து தொடங்கி வைத்து கலந்துகொண்டார். முத்து நகர் கடற்கரையில் இருந்து ஆரம்பிக்கப்பட்ட மாரத்தான் போட்டி வி.ஈ.ரோடு வழியாக வ.உ.சி. கல்லூரி முன்பு முடிவடைந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி, அவருடைய மனைவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முரளிரம்பா, உதவி கலெக்டர் சிம்ரன் சிங், பயிற்சி கலெக்டர் அனு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து மாரத்தான் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுக்கோப்பைகள், சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இந்த போட்டியில் ஆண்கள், பெண்கள் உள்பட 200 பேர் கலந்துகொண்டனர்.

இது குறித்து பயிற்சி கலெக்டர் அனு செய்தியாளர்களிடம் பேசுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றது. அதுபோல் இன்று மினி மாரத்தான் போட்டி நடைபெற்றுள்ளது. இந்த மாரத்தான் போட்டியில் வயது வரம்பின்றி சிறியவர் முதல் முதியவர் வரை அனைத்து தரப்பு வயதினரும் உற்சாகமாக கலந்து கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நாடாளுமன்ற தேர்தல் அமைதியான முறையில் 100 சதவீத வாக்குப் பதிவை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

Visual in editing.

Send in reporter app
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.