இறைதூதரான நபிகள் நாயகத்தின் பிறந்த நாளை நினைவுகூறும் வகையில், உலகெங்குமுள்ள இஸ்லாமியர்கள் மிலாடி நபியைக் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தூத்துக்குடியில் ஏழை - எளிய மக்களுக்கு இலவச உணவு அளித்து மிலாது நபி கொண்டாடப்பட்டது.
இதுகுறித்து அங்குள்ள பள்ளிவாசல் நிர்வாகியான முஜிபுர் ரகுமான், நபிகள் நாயகம் வழங்கிய ஆசியில், இல்லாதவர்களுக்கு உணவிடுங்கள் என கூறியிருந்தார். அதனை பின்பற்றும் வகையில் ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கும், யாசகர்களுக்கும், ஆதரவற்றவர்களுக்கும் உணவு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு கரோனா விதிமுறைகள் அமலில் இருப்பதால், அரசின் நெறிமுறைகளுக்கு உட்பட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடனும், பாதுகாப்புடனும் சமூக இடைவெளியை கடைபிடித்து பொது மக்களை தேடிச் சென்று உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க : பேரூராட்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை: ரூ. 52 ஆயிரம் பறிமுதல்