ETV Bharat / state

நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த அரிய வகை புகுந்த மிளா மான்..! மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர்..! - திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகை

Mila Deer: திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலக வளாகத்தில் புகுந்த அரியவகை மிளா மானை (கடமான்) மூன்று மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்திப் பிடித்தனர்.

Mila Deer
திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா மான் - மயக்க ஊசி செலுத்திப் பிடித்த வனத்துறையினர்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 10, 2023, 6:59 PM IST

திருச்செந்தூர் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் புகுந்த மிளா மான்..!

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்திற்கு உட்பட்ட திருச்செந்தூர் நெடுஞ்சாலைத் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தில் அரசினர் சுற்றுலா விருந்தினர் மாளிகையும் உள்ளது. இதன் வளாகத்தில் நேற்று (டிச 09) நள்ளிரவில் அரியவகை மான் இனத்தைச் சேர்ந்த கடமான் என்று அழைக்கப்படும் மிளா மான் புகுந்தது.

இதனையடுத்து இன்று (டிச.10) காலை வனத்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. கிடைக்கப்பட்ட தகவலின் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தலைமையில், திருநெல்வேலி வனத்துறை கால்நடை மருத்துவ குழுவினர் மிளா மான் (கடமான்) உள்ள இடத்திற்கு வருகை தந்தனர்.

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் புகுந்த மிளா மானை (கடமான்) வனத்துறையினர் கயிறு கட்டி மீட்டனர். அப்பொழுது எதிர்பாரா விதமாகக் கழுத்து இறுகி அந்த மான் பரிதாபமாக உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், சென்ற முறை நடைபெற்றது போல எந்தவொரு அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க வேண்டும் என்று முடிவு செய்த வனத்துறையினர். மயக்க ஊசி செலுத்தி இந்த மிளா மானை (கடமான்) பிடிக்க முயன்றனர். அதன்படி, 3 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மயக்க ஊசி செலுத்தி மிளா மானைப் (கடமான்) பாதுகாப்பாக பிடித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, வல்லநாடு வெளிமான் சரணாலயத்தில் விடுவதற்காகக் கொண்டு செல்லப்பட்டது. மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் வல்லநாடு, தேரிப்பகுதி மற்றும் உடன்குடிக் காட்டுப் பகுதியில் இந்த அரிய வகை மிளா மான் (கடமான்) இருப்பதாக மாவட்ட வன அலுவலர் மகேந்திரன் தெரிவித்தார்.

இதையும் படிங்க: இந்திய கால்பந்து அணியை தேர்வு செய்ய ஜோதிடர் நியமனமா? சு.வெங்கடேசன் கேள்விக்கு மத்திய அமைச்சர் அளித்த பதில் என்ன?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.