ETV Bharat / state

'பொருளாதாரச் சீரழிவுக்கு ஆன்லைன் வர்த்தகம்தான்  காரணம்' - வெள்ளையன்

author img

By

Published : Jan 4, 2020, 9:06 AM IST

தூத்துக்குடி: நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு ஆன்லைன் வர்த்தகம்தான் காரணம் என்று வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தெரிவித்துள்ளார்.

Merchants Demonstrated
Merchants Demonstrated

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி பழைய பேருந்துநிலையம் முன்பு நேற்று மாலை திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்கத் தலைவர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், அந்நிய நாட்டு உணவுப் பொருள்களை வாங்குவதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வணிகர் சங்கத்தினர் கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்வதற்காக காரில் வந்த வெள்ளையனை தூத்துக்குடி தென்பாகம் காவல் துறையினர் தடுத்தி நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதன் பின்னர் சிறிது நேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டத்துக்குக் காவல் துறையினர் அனுமதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களிடம் பேசுகையில், "நாட்டின் பொருளாதாரச் சீரழிவுக்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம்தான். ஆன்லைன் வர்த்தகத்திற்கான கதவை மத்திய அரசு திறந்து வைத்துவிட்டது. இதனால் சில்லறை வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உற்பத்தி செய்பவர், சந்தைப்படுத்துபவர், விற்பனையாளர் என அனைவரும் அந்நியர்களே உள்ளனர்.

ஆன்லைன் வர்த்தகத்திற்கு எதிராக வணிகர்கள் ஆர்ப்பாட்டம்

இதனால் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தை அவர்கள் அவருடைய சொந்த நாட்டுக்கு எடுத்துச்செல்வதால் பொருளாதாரச் சீரழிவு ஏற்படுகிறது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை, அந்நியப் பொருள்கள் விற்பனை செய்வதில்லை என்று தீர்மானித்து சுதேசிக் கொள்கையைக் கடைப்பிடித்துவருகிறது. அதன்படி பொதுமக்களும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருள்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருள்களையே வாங்க வேண்டும். சில்லறை வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும்.

அந்நிய நாட்டு பொருள்களைத் தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி ஒன்றாம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் விழிப்புணர்வு பரப்புரை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக எல்லா மாவட்டங்களிலும் பரப்புரை செய்துவருகிறோம்" என்றார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து அவதூறு பதிவு - கோவை இளைஞர் அதிரடி கைது!

Intro:தூத்துக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக வணிகர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த வெள்ளையனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.
Body:தூத்துக்குடியில் ஆன்லைன் வர்த்தகத்துக்கு எதிராக வணிகர்கள் ஆர்ப்பாட்டம் - போராட்டத்தில் கலந்து கொள்ள வந்த வெள்ளையனை போலீசார் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு.

தூத்துக்குடி

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் தூத்துக்குடி பழைய பஸ் நிலையம் முன்பு இன்று மாலை திடீரென ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் தலைமை தாங்கினார். தூத்துக்குடி மாவட்ட வணிகர் சங்க தலைவர் வினாயகமூர்த்தி முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், அந்நிய நாட்டு உணவு பொருள்களை மக்கள் வாங்குவதை தவிர்க்க வேண்டும் என வலியுறுத்தி கோஷங்களை எழுப்பி வணிகர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளையன் வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளிக்கையில்,

நாட்டின் பொருளாதார சீரழிவுக்கு காரணம் ஆன்லைன் வர்த்தகம் தான். ஆன்லைன் வர்த்தகத்திற்கான கதவை மத்திய அரசு கழட்டி வைத்து விட்டது. இதனால் சில்லறை வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் வர்த்தகத்தில் உற்பத்தி செய்பவர், சந்தைப்படுத்துபவர், விற்பனையாளர் என அனைவரும் அந்நியர். இதனால் வணிகத்தில் கிடைக்கும் வருமானத்தை அவர்கள் அவருடைய சொந்த நாட்டிற்கு எடுத்துச்செல்வதால் பொருளாதார சீரழிவு ஏற்படுகிறது.
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை அந்நியப் பொருள்கள் விற்பனை செய்வதில்லை என தீர்மானித்து சுதேசி கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதன்படி பொதுமக்களும் அந்நிய நாட்டு நிறுவனங்களின் உணவுப் பொருள்களை வாங்குவதை தவிர்க்க வேண்டும். இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களையே வாங்க வேண்டும். சில்லறை வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும்.
அந்நிய நாட்டு பொருள்களை தவிர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஜனவரி ஒன்றாம் தேதி சென்னையில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் விழிப்புணர்வு பிரச்சாரத்தை மேற்கொண்டோம். அதன் தொடர்ச்சியாக எல்லா மாவட்டங்களிலும் பிரசாரம் செய்து வருகிறோம் என்றார்.

முன்னதாக, ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்வதற்காக காரில் வந்த வெள்ளையனை தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய போலீசார், நடு வழியிலேயே தடுத்து நிறுத்தினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து சிறிது நேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளித்ததை தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் வெள்ளையன் கலந்து கொண்டார்.
இதுகுறித்து கருத்து தெரிவித்த வெள்ளையன், தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதற்கு டிஜிபி அலுவலகத்தில் அனுமதி வாங்கியுள்ளோம். அதனுடைய நகல் எல்லா மாவட்ட காவல் நிலையங்களுக்கும் அனுப்பப்பட்டு விடும் என தெரிவித்து இருந்தனர். ஆனால் தூத்துக்குடியில் காவல் நிலையத்திற்கு அது தொடர்பான நகல் வரவில்லை என தெரிவித்ததால் அந்த சலசலப்பு ஏற்பட்டது என பதிலளித்தார்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.