ETV Bharat / state

நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்கக்கோரி மதிமுக ஆர்ப்பாட்டம்!

Nellai - chennai Vande Bharat Express: நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயிலானது கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என ஒன்றிய அரசை வலியுறுத்தி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று (செப்.25) நடைபெற்றது.

நெல்லை-சென்னை வந்தே பாரத் ரயில் சேவை..கோவில்பட்டியில் நிற்க கோரி மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 26, 2023, 3:13 PM IST

துரை வைகோ செய்தியாளர்கள் சந்திப்பு

தூத்துக்குடி: நெல்லை - சென்னை இடையேயான வந்தே பாரத் ரயில் சேவை தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் சார்பில், மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ரமேஷ் தலைமையில், வந்தே பாரத் ரயில் கோவில்பட்டி ரயில் நிலையத்தில் நின்று செல்ல வேண்டும் என்பதை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழக முதன்மைச் செயலாளர் துரை வைகோ கலந்து கொண்டு, ஒன்றிய அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன உரையாற்றினார்.

இதையும் படிங்க: மின் கட்டண உயர்வு..! தமிழக அரசை கண்டித்து சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டம்!

பின்னர், செய்தியாளர்களை சந்தித்து துரை வைகோ பேசியதாவது,"வந்தே பாரத் ரயில் கோவில்பட்டியில் நிற்காது என்ற செய்தி கேட்டதும் பகுதி மக்கள் மட்டுமல்லாது தலைவர் வைகோ மிக ஏமாற்றம் அடைந்தார். அறிவிப்பு வந்த சில மணி நேரங்களிலேயே ஒன்றிய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் கோவில்பட்டியில் வந்தே பாரத் ரயில் நிற்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்ததுடன், மதிமுக சார்பில் 24 மணி நேரத்தில் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என தலைவர் வைகோ அறிவித்தார்.

அதனைத்தொடர்ந்து, மதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் என்ற அறிவித்த உடனே, மத்திய இணையமைச்சர் முருகன் கோவில்பட்டியில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதை வரவேற்கிறோம். இது எங்களது போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி. மேலும், அதுமுக - பாஜக இடையேயான கூட்டணி முறிவு குறித்து கேட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், திமுக, மதிமுக, திராவிட கழகம் என அனைத்து திராவிட கழங்களும் ஒன்று சேர்ந்து மதவாத சக்தியான பாஜகவை தமிழ்நாட்டிலிருந்து வேரோடு அகற்ற வேண்டும். இதுதான் என்னுடைய கோரிக்கை. இந்த முடிவை அதிமுக ஏற்றால் நாங்கள் வரவேற்போம்" என்று கூறினார்.

இதையும் படிங்க: வடகிழக்கு பருவமழைக்கு முன் மழைநீர் வடிகால் பணிகள் நிறைவு - தாம்பரம் ஆணையர் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.