இது குறித்து சென்டாக் கன்வீனர் குழு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் மருத்துவப் படிப்புக்கான எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., பி.ஏ.எம்.எஸ். ஆகியவற்றிற்கு நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறுகிறது.
இதற்கு விண்ணப்பிக்கும் பணி ஜூன் 4ஆம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதற்கு ஜூன் 16ஆம் தேதி வரை நீட் மதிப்பெண் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம். அனைத்து இடங்களும் நீட் மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும்.
அரசு மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். 106 இடங்கள், மாகி அரசு ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் பி.ஏ.எம்.எஸ். 42 இடங்கள், அரசு மருத்துவக்கல்லூரி பி.டி.எஸ். 29 இடங்கள், தனியார் கல்லூரிகளில் பிம்ஸ் 54 இடங்கள், மணக்குள விநாயகர் கல்லூரியில் 55 இடங்கள், வெங்கடேஸ்வரா கல்லூரியில் 50 இடங்கள், மாகி பல் மருத்துவக்கல்லூரியில் 50 இடங்கள் உள்ளன. இவ்வாறு இட விவரங்கள் உட்பட முழுத் தகவல்களும் இணையதளத்தில் பதிவிடப்படும்" என கூறப்பட்டுள்ளது.