சாத்தான்குளம் வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் காவலர்கள் தாக்கியதில் சந்தேகத்திற்குரிய வகையில் மரணம் அடைந்ததைத் தொடர்ந்து, காவல் துறையைக் கண்டித்து, தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் வணிகர்களும் கடும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இவர்களின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தூத்துக்குடி மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சிதம்பர நகரில் நேற்று (ஜூன் 25)ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டச் செயலாளர் அர்ஜுனன் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் சங்கரன் உள்பட பலர் கலந்து கொண்டு, காவல் துறைக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இதுகுறித்து அர்ஜுனன் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், 'சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகள் பென்னிக்ஸ், ஜெயராஜ் ஆகியோர் காவல் துறையினரால் துன்புறுத்தப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, பென்னிக்ஸின் ஆசன வாயில் லத்தியை வைத்து துன்புறுத்தி உள்ளனர். அவர்களை சிறைக்குக் கொண்டு செல்லும் வழியில், மாஜிஸ்திரேட் கூட அவர்களை சரியான முறையில் விசாரிக்கவில்லை.
இதைத் தொடர்ந்து மருத்துவமனையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படாமல், சிறையில் அடைத்துள்ளனர். சாத்தான்குளத்தில் இருந்து அருகில் உள்ள சிறையில் அவர்களை அடைக்காமல், தூத்துக்குடி மாவட்டத்தின் மறுமுனையில் உள்ள சிறையில் அடைத்து சித்ரவதை செய்துள்ளனர்.
அவர்களின் மரணத்திற்கு நீதி கிடைக்கவேண்டும். ஜெயராஜின் குடும்பத்தினருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழ்நாடு முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கை காவல் துறைக்குச் சாதகமாக உள்ளது. இது கண்டிக்கத்தக்கது.
முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பென்னிக்ஸ் மாரடைப்பு வந்து இறந்தது போலவும், ஜெயராஜ் காய்ச்சல் வந்து கரோனாவால் இறந்தது போலவும் குறிப்பிட்டுள்ளார்.
இதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாக கண்டிக்கிறது. இன்று(ஜூன் 26) சாத்தான்குளம் காவல் துறையின் செயலைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும்' என்றார்.
சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்! - சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம்
தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் மரணத்துக்கு நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், மாநிலம் தழுவிய போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.