ETV Bharat / state

கொற்கை துறைமுகம் எங்கே..? தூத்துக்குடி கடலில் ஆய்வு - தூத்துக்குடி மாவட்ட செய்தி

சங்க காலக் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண்பதற்கு 2ஆம் கட்டமாக கடல்சார் முன்கள புலஆய்வு பணிகள் தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை நடந்து வருகிறது.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Apr 1, 2023, 5:58 PM IST

தூத்துக்குடி துறைமுகத்தில் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காண கடல்சார் முன்கள புல ஆய்வு பணி!!

தூத்துக்குடி: சங்ககால பாண்டியர்களின் துறைமுகமாக கொற்கை போற்றப்படுகிறது. இது தவிர பல வெளிநாடுகளைச் சேர்ந்த நூல்களும் கொற்கையை பற்றி மிகச் சிறப்பாக கூறியிருக்கிறது. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை சார்பில் 1968ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வில் இரண்டரை அடி ஆழத்தில், ஆறு வரிசைகளில், ஒன்பது அடுக்குகளைக் கொண்ட செங்கல் கட்டுமான அமைப்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கப்பட்ட மூன்று சுடுமண் உறைகள் செங்கல் கட்டுமானமும் கண்டுபிடிக்கப்பட்டது. இதுதவிர, தமிழி எழுத்துப் பொறிக்கப்பட்ட பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டன. கொற்கை அகழாய்வில் சேகரிக்கப்பட்ட கரிமத்தினை பகுப்பாய்வு செய்ததில் கொற்கையின் காலம் கி.மு.8 என்றும் அதாவது 2500 ஆண்டுகளுக்கு முன்பு என காலக் கணிப்பு செய்யப்பட்டுள்ளது.

பாண்டியர் காலத்தில் கொற்கை மிகச் சிறந்த துறைமுகமாக இருந்துள்ளது. வெளிநாடுகளுடன் குறிப்பாக ரோம் நாட்டுடனும், இலங்கையுடனும், பெரும்பாலான தென்கிழக்கு ஆசிய நாடுகளுடனும் கடல்வழி வணிகம் நடைபெற்றுள்ளது. அகழாய்வாளர்கள் கொற்கையில் ரோமநாட்டு மட்கலன்களும், ரௌலட்டட் வகை பானை ஓடுகளையும் கண்டெடுத்துள்ளனர்.

கடந்த 2021ஆம் ஆண்டு கொற்கையில் மேற்கொண்ட அகழாய்வில் கங்கைச் சமவெளியைச் சார்ந்த கி.மு 5-ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய வட இந்திய கருப்பு வண்ண மெருகேற்றப்பட்ட பானை ஓடுகளும் மற்றும் கருப்பு பூச்சுப் பெற்றுள்ள பானை ஓடுகளும் கண்டுபிடிக்கப்பட்டது. இவை தமிழ்நாடானது இந்தியாவின் பிற பகுதிகளோடு குறிப்பாக கங்கை சமவெளி நகரங்களுடன் நெருங்கிய உள்நாட்டு வணிகம் நடைபெற்றுள்ளதைக் எடுத்துக் காட்டுகிறது.

இதற்கிடையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் கொற்கை துறைமுகத்தை கண்டுபிடிப்பதற்காக கடல் சார் ஆய்வு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதற்கு முன்னர் கடல் சார் முன்கள புல ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதயைடுத்து கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 3ஆம் தேதி தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரை 7 நாட்கள் கொற்கை துறைமுகத்தை அடையாளம் காணும் வகையில் முன்கள புல ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இந்த பணியினை இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் மற்றும் தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்நாடு தொல்லியல் துறையினர் இந்த ஆய்வுப்பணிகளை நடத்தினர்.

இந்த பணிகளை தொழில்துறை மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தொடங்கி வைத்தார். தொடர்ந்து இந்த பணிகள் நிறைவடைந்த பின்னர் 2ஆம் கட்டப் பணிகள் டிசம்பர் மாதத்திற்கு பிறகு தொடங்கும் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது கடந்த ஒரு வார காலமாக தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து திருச்செந்தூர் வரையில் கடல்சார் முன்கள புலஆய்வு பணிகள் நடந்து வருகிறது. மல்டிபீம் எக்கோ சவுண்டிங் சைட்ஸ்கேன் சோனர் சப் பாட்டம் பிரபைலர் என்ற அதி நவீன கருவி மூலம் கப்பலில் சென்று இந்த ஆய்வுப்பணிகள் நடந்து வருகிறது.

இதில் தமிழ்நாடு தொல்லியல் துறை, இந்திய கடல்சார் பல்கலைக்கழகம், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனமும் இணைந்து இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க: ஓலைச்சுவடி எழுத்து வடிவங்களை புத்தகமாக மாற்ற வேலைகள் நடைபெறுகிறது - பேராசிரியர் சூ. தாமரை பாண்டியன்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.