மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் கொண்டாட்டம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி நடைபெற்றது. இதையொட்டி இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு விழாவில் 320 பள்ளி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு "ரூபிக் க்யூப்" மூலம் அதனை கண்டுபிடித்தவரின் உருவத்தை அடுக்கி சாதனை படைத்தனர்.
இந்த சாதனை ஆசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸிலும் இடம்பெற்றது. இந்த சாதனையை முறியடிக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்பிக் நகர் மேல்நிலைப் பள்ளியில் "ரூபிக் க்யூப்" மூலம் மகாத்மா காந்தியின் உருவத்தை அடுக்கும் முயற்சி இன்று நடைபெற்றது.
தலைமை ஆசிரியர் பாபு ராதாகிருஷ்ணன் தலைமையில் தொடங்கிய நிகழ்ச்சியில் மூன்று பள்ளிகளைச் சேர்ந்த 400 மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு "ரூபிக் க்யூப்" மூலம் மகாத்மா காந்தியின் உருவத்தை அடுக்கி சாதனை நிகழ்த்தினார். இதன் மூலமாக இங்கிலாந்தில் நடத்தப்பட்ட முந்தைய சாதனை முறியடிக்கப்பட்டு உள்ளது.
இதனை புக் ஆப் ரெக்கார்ட்ஸ் குழும உறுப்பினர் விவேக் ராஜா அறிவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாரியம்மாளுக்கு பாராட்டு சான்றிதழும், விருதும் வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: நாட்டுப்புற கலைஞர்களுக்கு கலைமாமணி விருது வழங்க கோரிக்கை.!