ETV Bharat / state

தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

author img

By

Published : Aug 5, 2021, 10:25 AM IST

தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டு பெருவிழாவின் கடைசி நாளான இன்று (ஆக.05) உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை
தூத்துக்குடிக்கு உள்ளூர் விடுமுறை

தூத்துக்குடி : தூய பனிமய மாதா பேராலயத்தின் 439ஆம் ஆண்டு 10 நாள் பெருவிழா கடந்த 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் கோலாகலமாகத் தொடங்கியது. 10ஆம் நாள் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான சப்பர பவனி இன்று நடைபெறுகிறது. இதையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டு பனிமய மாதாவை தரிசனம் செய்வார்கள். எனவே அன்றைய தினம் ஒவ்வொரு ஆண்டும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுவது வழக்கம்.

இந்த ஆண்டு கரோனா காரணமாகத் தமிழ்நாடு அரசின் கரோனா வழிகாட்டு அறிவுரைகள்படி பக்தர்கள் பங்கேற்பின்றி பனிமய மாதா பேராலய திருவிழா நடைபெற்று வருகிறது. திருவிழாவின் ஒவ்வொரு நாளிலும் நடைபெற்றுவரும் நற்கருணை ஆசீர், கூட்டுத் திருப்பலி போன்ற நிகழ்ச்சிகள் பக்தர்கள் அனுமதியின்றி நடத்தப்படுகிறது.

உள்ளூர் விடுமுறை

மேலும் நற்கருணை பவனி, கொடியிறக்க பவனி, சப்பர பவனி, சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் பனிமய மாதா ஆலய கடைசிநாள் திருவிழாவான இன்று(ஆக.5) தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஈடாக வருகிற 7ஆம் தேதி அலுவலக வேலை நாளாக அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் விடுமுறை தினமான இன்று காலை பனிமய மாதா ஆலயத்தில் தூத்துக்குடி கத்தோலிக்க மறை மாவட்ட பேராயர் ஸ்டிபன் ஆண்டகை தலைமையில் பெருவிழா கூட்டுத் திருப்பலி பக்தர்கள் பங்கேற்பின்றி நடைபெறுகிறது. அன்று மாலையில் நடைபெறும் அன்னையின் சப்பர பவனி நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மீன் சந்தைகளில் மக்கள் கூட்டம் - மாநகராட்சி நடவடிக்கை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.