ETV Bharat / state

குலசை தசரா: இன்று நள்ளிரவில் மகிஷா சூரசம்ஹாரம் - Mahisha Surasamharam in thoothukudi

தூத்துக்குடி குலசை முத்தாரம்மன் கோயிலின் தசரா திருவிழாவில் இன்று நள்ளிரவு மகிஷா சூரசம்ஹாரம் கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

குலசை தசரா: இன்று நள்ளிரவில் மகிஷா சூரசம்ஹாரம்

author img

By

Published : Oct 5, 2022, 3:22 PM IST

தூத்துக்குடி: புகழ்பெற்ற தசரா திருவிழா மைசூருக்கு அடுத்தபடியாக, தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டு தசரா திருவிழா கடந்த செப்டம்பர் 26ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

பத்து நாட்கள் நடைபெறும் இந்த விழாவில், முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம் இன்று (அக். 5) நள்ளிரவு கோயில் கடற்கரையில் நடைபெறவுள்ளது.

இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல் துறையினர் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கோயில் வளாகம், கடற்கரைப்பகுதி மற்றும் நகர் பகுதி உள்ளிட்டப்பல்வேறு இடங்களில் 48 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: குலசை முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா கோலாகலம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.