தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனை, தெற்கு பொம்மையாபுரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளி பாலமுருகன் (22). இவருக்கும், தெற்கு பொம்மையாபுரத்தைச் சோ்ந்த கருப்பசாமி, அவரது மகன் மகாராஜன் ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
இதில், அவா்கள் இருவரையும் பாலமுருகன் கடந்த ஆண்டு மே மாதம் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து பசுவந்தனை காவல் துறையினர் வழக்குப்பதிந்து, பாலமுருகனை கைதுசெய்தனா். இந்த வழக்கில் நிபந்தனை பிணையில் வந்த பாலமுருகன், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி முதல் கையெழுத்திட்டு வந்தாா்.
இந்நிலையில், நேற்று (மார்ச் 3) பாலமுருகன் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டுவிட்டு, வந்தபோது அடையாளம் தெரியாத நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவந்தனர்.
இந்தக் கொலை தொடர்பாக தெற்கு பொம்மையாபுரத்தைச் சேர்ந்த காளிசாமி (45) என்பவரை காவல் துறையினர் கைதுசெய்துள்ளனார். மேலும் அவரது சகோதரர் கருத்தபாண்டி உள்பட மூன்று பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிந்து வலைவீசி தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: காஞ்சிபுரத்தில் 80 கிலோ எடையுடைய போதை பொருள்கள் பறிமுதல்!