கோவில்பட்டி அருகே ஆலம்பட்டி கிராம மக்கள் எஸ்.கருப்பசாமி என்பவர் தலைமையில் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அவர்கள் வட்டாட்சியர் மணிகண்டனிடம் வழங்கிய மனுவில், ”எங்கள் கிராமத்தில் அனைவருக்கும் பயன்படும் வகையிக் குடிநீர் கிணறு ஒன்று உள்ளது. கிராமத்தில் வசித்துவரும் நபர் ஒருவர், தனது பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்டும் பணியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் வீட்டுக்கு அருகிலுள்ள குடிநீர் கிணற்றை உடைத்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் நடைபாதையையும் ஆக்கிரமிப்பு செய்துள்ளார். இதனால் மற்ற கிராம மக்கள் பெரிதளவில் பாதிக்கபடுகின்றனர். எனவே உடனடியாக அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்து ஆக்கிரமிப்பை அகற்றித்தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட வட்டாட்சியர், முறையாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். அதன் பின்னர் அவர்கள் கலைந்துசென்றனர்.
இதையும் படிங்க:கீழடியில் சுவர், உறைகிணறு கண்டெடுப்பு!