ETV Bharat / state

பூட்டிய வீட்டிற்குள் ரத்த வெள்ளத்தில் கணவன் மனைவி சடலமாக மீட்பு - போலீஸ் விசாராணை - Death of husband and wife in a locked house

கோவில்பட்டி அருகே பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் கணவன் மனைவி உயிரிழந்தது தொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Oct 31, 2022, 7:23 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே இலுப்பையூரணி ஊராட்சிக்குட்பட்ட பெருமாள் நகரைச் சேர்ந்த முத்துசாமி மகன் (கட்டட தொழிலாளி) ராஜபாண்டி(41). இவரது மனைவி பரணி செல்வி(39), இவர் லாயல் மில் காலனியில் பெட்டிக்கடை நடத்தி வந்தார். இவர்களுக்கு மனோஜ்குமார் (19), என்ற மகனும், உமா மகேஸ்வரி(15) என்ற மகளும் உள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் தாங்கள் கட்டிய புது வீட்டில் இவர்கள் குடியேறியுள்ளனர். முன்னதாக, வீடு கட்டுவதற்காக வாங்கிய கடனை அடைப்பது குறிப்பது ராஜபாண்டி அடிக்கடி புலம்பி வந்ததாகக் கூறப்படுகிறது. நேற்று (அக்.30) கடையிலிருந்து இருவரும் வீடு திரும்பிய நிலையில், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சரியாக இரவு 7:00 மணியளவில் அவர்களது மகன் மனோஜ்குமார் வீட்டின் கதவை எவ்வளவோ தட்டியும் திறக்காததால், சந்தேகமடைந்து கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தார். அதன்படி அங்கு சென்ற காவல் நிலைய ஆய்வாளர் சுஜித் ஆனந்த் உள்ளிட்ட போலீசார் வீட்டின் கதவை உடைத்து பாரத்தனர்.

அப்போது பரணி செல்வி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும், ராஜபாண்டிக்கு கழுத்தில் கத்திக்குத்து விழுந்த நிலையிலும் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதையடுத்து இருவரது சடலங்களையும் மீட்டு உடற்கூராய்வுக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த டிஎஸ்பி வெங்கடேஷ் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கடன் தொல்லை காரணமாக அவர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில், ஒருவரை ஒருவர் கத்தியால் தாக்கி கொண்டு உயிரிழந்தார்களா? (அ) தகராறில் ராஜபாண்டி தனது மனைவியை கொன்று விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றாரா? (அ) வேறு ஏதும் காரணமா? என்ற கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: காதலனை விஷம் வைத்துக்கொன்ற காதலி - விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.