தூத்துக்குடி: கோவில்பட்டி தங்கப்பன் நகரைச் சேர்ந்த இளங்கோவன் மனைவி கற்பகம் (33). இவர்களது மகள் தர்ஷினி (7). அக்டோபர் 12 அன்று கற்பகம், தர்ஷினியுடன் கோவில்பட்டி கடலையூர் சாலையில் உள்ள தனியார் உணவகத்திற்குச் சென்று இருவரும் புரோட்டா சாப்பிட்டனர். அதன்பின் அருகே உள்ள கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து இருவரும் வீடு திரும்பினர். வீட்டிற்கு வந்த தாயும் மகளும் திடீரென மயக்கம் அடைந்த நிலையில் இருவரும் உயிரிழந்தனர்.
இது குறித்து தகவலறிந்த கிழக்கு காவல் நிலைய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுவந்தனர். இந்த விசாரணையில் இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: கரோனா தடுப்பூசி செலுத்துவதில் 70% விரைவில் பெறுவோம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்