ETV Bharat / state

'சினிமா கருவிகள் அனுமதி குறித்து இனி ஆராயப்படும்' - அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி: சினிமா காட்சி எடுப்பதற்குப் பயன்படுத்தும் கருவிகளுக்கு அனுமதி பெறுவது குறித்து இனி வரும் காலங்களில் ஆராயப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு கோவில்பட்டி கடம்பூர் ராஜூ செய்தியாளர் சந்திப்பு Kadambur Raji Press Meet Thoothukudi Kadambur Raji Press Meet Kovilpatti Kadambur Raji Press Meet
Kadambur Raji Press Meet
author img

By

Published : Feb 29, 2020, 7:41 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வணிக வைசிய நடுநிலைப்பள்ளி, சுப்பிரமணிய ஆசிரியர் நினைவு நர்சிங் பள்ளி ஆகிய பள்ளிகளில் இருபெரும் விழாக்கள் நடைபெற்றன. இதில், செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு விழாக்களைத் தொடங்கிவைத்து சிறப்புறையாற்றினார்.

இதனைத் தொடர்ந்து, நகராட்சி மற்றும் இந்திய மருத்துவக் கழகம் சார்பில் கோவில்பட்டி நகராட்சி துப்புரவுப் பணியாளர்கள், அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்மருத்துவ முகாமை அவர் தொடங்கிவைத்தார். அதேபோல், ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு வழங்கும் திட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு பயனாளிகளுக்குச் சான்றிதழ்கள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், "தமிழ்நாடு முழுவதும் அனைத்துக் கிராமங்களிலும் உள்ள பயனாளிகளுக்கு பசுமை வீடு திட்டத்தில் வழங்கப்படும். சிறுபான்மையினர்களுக்குப் பாதுகாவலர்கள் என்று நடிக்கும் திமுக கடந்த முறை மாநிலங்களவைத் தேர்தலில் சிறுபான்மை பிரிவினருக்கு இடம் தரவில்லை.

ஆனால், அதிமுக கூட்டணி ஒப்பந்தப்படி பாமக அன்புமணி ராமதாஸ், சிறுபான்மை சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் முகமது ஜான் ஆகியோருக்கு வழங்கியது. குடியுரிமை திருத்தச் சட்டத்தில் இஸ்லாமியர் வாக்குகளைப் பெறுவதற்காகச் சுயநலத்தோடு போராடும் திமுக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு இஸ்லாமியருக்கு கூட வாய்ப்பு தரவில்லை.

இன்றைக்கு ஸ்டெர்லைட் விஷயத்தில் அரசு முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இல்லை. அது தேசிய பசுமை தீர்ப்பாயம், உச்ச நீதிமன்றம் கையில் மட்டும்தான் உள்ளது. இருப்பினும், அரசு என்னென்ன செய்ய முடியுமோ அதை எழுத்துப்பூர்வமாக எல்லா வகையிலும் செய்துவருகிறது. ஆனால் எந்தக் காரணம் கொண்டும் ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கூடாது என்பதில் அரசு தெளிவாக உள்ளது. பெப்சி நிறுவனம் அரசுக்குப் பல்வேறு கோரிக்கைகள் வைத்ததன் அடிப்படையில் படப்பிடிப்புக் குழுவினருக்கு, போதிய பாதுகாப்பை அரசு வழங்கி வருகிறது. ஆனால் படப்பிடிப்புத் தளத்தில் இப்படிப்பட்ட சில விபத்துகள் நடைபெற்றுள்ளன.

இது குறித்து முழுமையாக ஆராய்ந்து, எதிர்காலத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமின்றி, எதிர்பாராமல் விபத்துகள் நடந்தாலும், அதில் பாதிக்கப்படுபவர்களுக்கு உரிய இழப்பீடு தருவதற்கு என்ன வழி வகை செய்ய வேண்டும் என்பது குறித்து ஆலோசனை செய்துவருகிறோம்.

செய்தியாளர் சந்தித்த அமைச்சர் கடம்பூர் ராஜூ

இதற்காக அரசு விரைவில் நல்ல முடிவை எடுக்கும். சினிமா காட்சி எடுப்பதற்காக அரசிடம் அனுமதி பெறப்படுகிறது. படப்பிடிப்பில் பயன்படுத்தப்படும் பொருள்களின் உறுதித்தன்மை குறித்து அரசு ஆய்வுசெய்துவருகிறது, வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் இயந்திரங்களைக் கொண்டு படப்பிடிப்பு நடத்துவதற்கு அரசிடம் அனுமதி பெறுவது குறித்து அரசு ஆலோசனை செய்யும்" என்றார்.

தொடர்ந்து மறைந்த முன்னார் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72ஆவது பிறந்தநாளை முன்னிட்டு கோவில்பட்டி நகர கழகம் சார்பில் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதையும் படிங்க:தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது - கடம்பூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.