சுதந்திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 220ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு இன்று கயத்தாரில் உள்ள மணிமண்டபத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி கயத்தாருக்கு வருகைதந்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. அங்குள்ள ஸ்தூபியில் மரியாதை செலுத்தியதைத், தொடர்ந்து மணி மண்டபத்தில் உள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து புகழஞ்சலி செலுத்தினார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, "அனைத்து பிரச்னைகள் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியவர்கள்தான் இம்முறை நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அரசியலுக்காக எம்பிக்கள் குரல் கொடுக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கலாம்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவின் கருத்துகள் மிகவும் அச்சத்தையும் ஆபத்தையும் உண்டாக்கக்கூடிய விதத்தில் இருக்கிறது. காஷ்மீருக்கு மாநிலத் தகுதி வழங்குவோம் என்று அவர்கள் கூறுவது நம்புவதற்கில்லை" எனக் கூறினார்.