தூத்துக்குடி: திருச்செந்தூர் அருகில் உள்ள உடன்குடி அடுத்த செட்டியாபத்தில் ஐந்து வீட்டுச் சுவாமி அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறைக்குச் சொந்தமான இக்கோயிலில் அனைத்து சமூகத்தினரும் சைவம் மற்றும் அசைவ பணிவிடைகள் சமைத்து அனைவருக்கும் சமமாக வழங்குவார்கள்.
மிகவும் பிரசித்தி பெற்ற இக்கோவிலுக்குத் தமிழ்நாடு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இந்த நிலையில் திருக்கார்த்திகை தீபத்தை முன்னிட்டு இன்று இரவு சொக்கப்பனை கொளுத்துவது பாரம்பரியமாக உள்ளது.
அதனால் கோயிலிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரம் உள்ள பகுதியிலிருந்து 40 அடி நீளமுள்ள ஒன்றரை டன் எடையுள்ள பச்சை பனை மரத்தை வெட்டி இளைஞர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் தலையில் தூக்கி ஊர்வலமாக எடுத்துச் சென்று கோயிலில் கொண்டு சேர்த்தனர். பின்னர் பனை மரத்திற்குச் சந்தனம் குங்குமம் இட்டு வணங்கினர்.
இதையும் படிங்க: திருக்கார்த்திகையை முன்னிட்டு அகல் விளக்குகள் விற்பனை அமோகம்