ETV Bharat / state

கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் தொடங்க வேண்டும் - எழுத்தாளர் உதயசங்கர் கோரிக்கை! - எழுத்தாளர் உதயசங்கர்

கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்றை கோவில்பட்டியில் தொடங்க வேண்டும் என பால புரஸ்கர் விருதாளர் உதயசங்கர் கோரிக்கை வைத்துள்ளார்.

எழுத்தாளர் உதயசங்கர்
எழுத்தாளர் உதயசங்கர்
author img

By

Published : Jun 24, 2023, 3:49 PM IST

பால புரஸ்கர் விருதாளர் - எழுத்தாளர் உதயசங்கர் பேட்டி

தூத்துக்குடி: இந்த ஆண்டின் சாகித்திய பால புரஸ்கர் விருது டெல்லியில் நேற்று அறிவிக்கப்பட்டது. இதில் தமிழ் மொழிக்கான விருதுக்கு எழுத்தாளர் உதயசங்கர் தேர்வு செய்து அறிவிக்கப்பட்டார். இவர் எழுதிய ’ஆதினின் பொம்மை’ என்ற நூலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது.

கோவில்பட்டியில் 1960ம் ஆண்டு பிறந்தவர், எழுத்தாளர் உதயசங்கர். இவர் தமிழ்நாட்டின் நிகழ்கால குழந்தை இலக்கிய எழுத்தாளர்களில் முக்கியப்பங்கு வகித்து வருகிறார். இவர் நீலக்கனவு, யாவர் வீட்டிலும், பிறிதொரு மரணம் உள்ளிட்ட சிறுகதை நூல்களையும் எழுதியுள்ளார்.

மேலும், 40 ஆண்டுகளுக்கும் மேலாக எழுத்தாளராக இருந்து வரும் இவர், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராகவும் செயலாற்றி வருகிறார். அதேபோல், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “நம் வரலாற்றின் வேர்களை இளையோர் அறிய, கீழடியை அடித்தளமாய் கொண்டு எழுதியுள்ள ஆதனின் பொம்மை என்ற நாவலை உருவாக்கி, அதற்கு அங்கீகாரமாக சாகித்திய பால புரஸ்கர் விருது பொற்றுள்ளார், எழுத்தாளர் உதயசங்கர். அவருக்கு தமிழக முதலமைச்சர் என்ற முறையில் எனது மனமார்ந்த வாழ்த்துகள்” எனக் கூறியுள்ளார். இதேபோல் ஆளுநர், முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டப் பலரும் வாழ்த்துத் தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க: அரசு கலை மற்றும் அறிவியியல் கல்லூரிகளில் 81,107 மாணவர்கள் சேர்க்கை!

மேலும், விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ரூபாய் 50 ஆயிரம் காசோலையும், செப்புப் பட்டயமும் கொண்ட விருது டெல்லியில் பின்னர் நடைபெறும் சிறப்பு நிகழ்ச்சியில் வழங்கப்படும். இந்த நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த எழுத்தாளர் உதயசங்கர், “1990க்குப் பிறகு குழந்தைகளுக்காக எழுத வேண்டும் என்ற முறையில், குறிப்பாக இளைய தலைமுறையிடம் நாம் சரியான விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டியதாய் இருக்கிறது.

நாம் குழந்தைகளிடம் பகுத்தறிவு அறிவியல் பூர்வமான விஷயங்களைக் கொண்டு செல்ல வேண்டும் என்றால், நாம் குழந்தைகளை நோக்கி எழுத வேண்டும் என்று தோன்றியதால் கிட்டத்தட்ட 51 நூல்களை எழுதி இருக்கிறேன். இதில் 42 நூல்கள் சிறு குழந்தைகளுக்கும், 9 நூல்கள் இளையோருக்கானவையாகும்.

இந்த நூல்களில் எல்லாம் குழந்தைகளுக்கு அரசியலைச் சொல்லி இருக்கிறேன் என்று கூறலாம். மேலும், 68 நூல்கள் மொழிபெயர்ப்பு செய்திருக்கிறேன். கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் ஒன்றை கோவில்பட்டியில் தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளோம்.

அந்தக் கோரிக்கையை அரசு ஏற்று புதிய எழுத்தாளர்களை, படைப்பாளர்களை மற்றும் ஆய்வாளர்களை உருவாக்குவதற்கு ஒரு மையம் அமைக்க வேண்டும் அல்லது எழுத்தாளர் கி.ராஜநாராயணன் மணிமண்டபத்தை அதற்காக பயன்படுத்தலாம் என்ற வேண்டுகோளையும் வைக்கிறேன்” என்றார்.

இதையும் படிங்க: வேங்கைவயல் டிஎன்ஏ பரிசோதனை தொடர்பான உத்தரவுக்கு எதிரான வழக்கில் திருப்பம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.