தூத்துக்குடி: கன்னியாகுமரிக்கு செல்ல வேண்டி சென்னையில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடி வாகைகுளம் விமான நிலையத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், "மணிப்பூர் கலவரம் குறித்து பிரதமர் உரிய வழக்கம் கொடுக்க வேண்டும் என கூட்டனி கட்சிகளான "இந்தியா" வழியுறுத்தியது. பிரதமரின் மௌனம் குறித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் கொண்டு வந்தோம்.
இதனைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 10 ஆம் தேதி நடைபெற்ற கூட்டுத் தொடரில் பிரதமர் அதற்கு பதில் அளித்தார். அவர் மட்டுமல்ல அவையில் இருந்த அமைச்சர்களும் அதற்கு பதில் அளித்தனர். ஆனால் என்னவோ, பிரதமரோ அல்லது பதிலளித்த அமைச்சர்களோ எதிர்கட்சிகள் முன்வைக்கப்பட்ட மணிப்பூர் விவகாரம் குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதற்கு பதிலாக தமிழக ஆளும் கட்சியின் அரசியல் வரலாறு குறித்து விமர்சனம் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: நாங்குநேரி சாதி மோதல் விவகாரம்.. மாணவர்கள் சாதிய வேற்றுமை குறித்து தமிழிசை சௌந்தரராஜன் வேதனை!..
மணிப்பூர் மக்களின் நிலை மற்றும் கலவரம் குறித்து எதிர்கட்சிகளின் கோரிக்கைக்கு பதில் கொடுக்காமல், தமிழக அரசின் வராலாறு குறித்து பேசி பிரச்சனையை திசை திருப்புகின்றனர். மேலும், கலவரம் குறித்து ஒரு வார்த்தை கூட வாய் திறக்காத அமைச்சர்கள், தற்போது தமிழக ஆளும் கட்சி குறித்து பேசுவது அரசியல் நோக்கமாகவே தெரிகிறது.
நாடாளுமன்றத்தில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் கலவரம் குறித்து வாய் திறக்காமல் கோரிக்கை விடுத்தவர்கள் மீது விமர்சனங்களை கொண்டு சாடுவது மிகுந்த மனவருத்தத்தை அளிக்கிறது. இதன் காரணமாகவே நாங்கள் (எதிர்கட்சிகள் 'இந்தியா') கூட்டத் தொடரை புறக்கணித்தோம். மேலும் அவர்கள் நாடாளுமன்றத்தை முற்றிலும் பிரசாரக் கூட்டம் மற்றும் பிரசார மேடை போல் பயன்படுத்தி வருகின்றனர். இது கூடுதல் வேதனை அளிக்கிறது" என்று தெரிவித்தார்.
முன்னதாக விமான நிலையத்துக்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், புதுச்சேரி துணைநிலை ஆளுநரான தமிழிசை சவுந்தரராஜனை சந்தித்து பேசினார். இருவரும் கைகுலுக்கி நட்பு ரீதியாக உரையாடினர். நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது பிரதம்ர் மோடி கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி விவாதம் நடத்தினார். எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பை தொடர்ந்து நம்பிக்கையில்லா தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ஊட்டியில் இருந்து சாலைமார்க்கமாக வயநாடு செல்கிறார் ராகுல் காந்தி - தோடர் பழங்குடியின மக்களுடன் சந்திப்பு!