ETV Bharat / state

கனிமொழி விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக் கூட தெரிவித்தது கிடையாது - தமிழிசை - கனிமொழி

தூத்துக்குடி: திமுக வேட்பாளர் கனிமொழி விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவித்ததுக் கிடையாது என பாஜக வேட்பாளர் தமிழிசை விமர்சனம் செய்துள்ளார்.

தமிழிசை சவுந்தர ராஜன்
author img

By

Published : Mar 30, 2019, 5:48 PM IST

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடும் தமிழிசை கழுகுமலையில் உள்ள கழுகாசலமூர்த்தி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, இறைவனை வணக்கி விட்டு ஆரம்பிக்கும் எல்லா நிகழ்வுகளும் வெற்றியை தரும். ஆனால் திமுக வேட்பாளர் கனிமொழி விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து தெரிவித்தது கிடையாது.

அப்படி என்றால் விநாயகரை கும்பிடுபவர்கள் அனைவரும் அவர்களுக்கு வேண்டப்படாதவர்கள். 2ஜி வழக்கு கனிமொழி தலையில் மட்டுமல்ல, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலையிலும் தொங்குகிறது. சாதிக்பாட்ஷா கொலை வழக்கினை விசாரணை நடத்தினால் அவர்கள் எங்கு இருப்பார்கள் என்று நமக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பா.ஜ.க சார்பில் அக்கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் போட்டியிடுகிறார். அவர் கோவில்பட்டி அருகேயுள்ள கழுகுமலையில் கழுகாசலமூர்த்தி திருக்கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு தனது பிரச்சாரத்தினை தொடங்கினார், கழுகுமலை நகரம், காலங்கரைபட்டி, கல்லூரணி, வானரமுட்டி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்தார். அப்போது அவர் பேசுகையில் இறைவனை வணக்கி விட்டு ஆரம்பிக்கும் எல்லா நிகழ்வுகளும் வெற்றியை தரும், ஆகையால் தூத்துக்குடி நாடாளுமன்றம் நமக்கு வெற்றியை தரும்.  கனிமொழி சேர்ந்த திமுகவினர் விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து சொல்லியது கிடையாது. அப்படி என்றால் விநாயகரை கும்பிடுபவர்கள் அவர்களுக்கு வேண்டப்படாதவர்கள். எதிர்கட்சியினர் யார் பிரதமர் வேட்பாளர் என்று கூட சொல்ல முடியவில்லை. வேண்டும் மோடி மீண்டும் மோடி, என்றுமே மோடி தான் பிரதமர். திமுக அமைத்திருப்பது மகா கூட்டணி கிடையாது. நாங்கள் அமைத்து இருப்பது தான் மகா கூட்டணி. நாங்கள் கூட்டணி அமைத்து இருந்தாலும் நாம் எல்லோரும் ஒற்றைகுரலில் சொல்வது எங்கள் பிரதமர் மோடி என்று. அவர்கள் கூட்டணியில் யார் பிரமதர் ?. 2ஜி வழக்கு கனிமொழி தலையில் மட்டுமல்ல, மு.க.ஸ்டாலின் தலையிலும் தொங்குகிறது, சாதிக்பாட்ஷா கொலை வழக்கினை விசாரணை நடத்தினால் அவர் எங்கு இருப்பார் என்று நமக்கு தெரியும்.

கனிமொழி இறக்குமதி செய்யப்பட்ட வேட்பாளர். நான் இந்த மண்ணின் மகள், உங்களில் ஒருத்தி. செம்மனுக்கு சொந்தக்காரி.  ஊழலை இந்த மண் எப்போதும் ஒத்துக்கொள்ளது. தேசிய மண், தேசியமும், தெய்வீகம் உள்ள மண் நிச்சியமாக தாமரை மலர்ந்தே தீரும், இரட்டை இலை உதவியுடன் தாமரை மலரும், மாம்பழம் பழக்கும், முரசு கொட்டும் என்றார்.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.