ETV Bharat / state

முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம்: காலையில் எடப்பாடி பழனிசாமி, மாலையில் கனிமொழி பரப்புரை - Kanimozhi speech IN URBAN LOCAL BODY ELECTION CAMPAIGN IN thoothukudi

'பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களுக்குச் சரியான சாலை வசதி கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது. அங்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டிலே பாஜக இவ்வளவு நாளும் அதிமுக மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தது. இப்போது தனியே தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்துள்ளனர், அக்கட்சியினர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக என தனித்தனியே இரண்டு முகமாக வந்தாலும் இரண்டும் ஒரே முகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்' என கனிமொழி எம்.பி., தூத்துக்குடியில் தீவிர பரப்புரை செய்தார்.

முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம் : காலத்தில் காலையில் எடப்பாடி, மாலையில் கனிமொழி

author img

By

Published : Feb 7, 2022, 11:09 PM IST

தூத்துக்குடி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பரப்புரைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இன்று (பிப்.7) காலை அதிமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார்.

இந்நிலையில் மாலையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினரும், திமுக மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி எம்.பி., மாநகரப் பகுதிகளில் தீவிர பரப்புரை செய்தார்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடியில் கனிமொழி பிரச்சாரம்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் தூத்துக்குடியில் கனிமொழி பரப்புரை

'நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டும் என்பதற்காக...'

பிரச்சாரத்தின் போது அவர் பேசுகையில், "மருத்துவ வாய்ப்பு மறுக்கப்பட்ட ஏழை மாணவர்கள் வாழ்வில் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான் அரசு மருத்துவக் கல்லூரிகள் தமிழகத்திலேயே உருவாக்கப்பட்டது. ஆனால், 'நீட்' கொண்டு வந்து ‌‌தமிழ் மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட கல்லூரிகளில் கூட நமது பிள்ளைகள் படிக்க முடியாத சூழலை உருவாக்குகின்றனர்.

முத்து நகரத்தின் தேர்தல் யுத்தம் : காலையில் எடப்பாடி, மாலையில் கனிமொழி

ஏழை மாணவர்களுக்கு மருத்துவம் என்றும் எட்டாக்கனியாக மாறிவிடக் கூடாது, அவர்கள் ஏழை நிலையிலிருந்து விடுபட வேண்டும் என்பதற்காகத் தான் தமிழ்நாட்டிற்கு 'நீட்' தேர்விலிருந்து விலக்கு கேட்டுக் கொண்டிருக்கிறோம். ஆனால், நாம் ஒடுக்கப்பட வேண்டும். நமக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட வேண்டும் என்பதற்காக நீட் தேர்வை திணித்துக் கொண்டிருக்கின்றனர்.

அதிமுக-க்கு முதுகெலும்பு இல்லை

இதைத் தட்டி கேட்க இதற்கு முன்பு இருந்த அதிமுக ஆட்சிக்கு முதுகெலும்பு இல்லை. அதனால், திமுக அதன் கூட்டணிக்கட்சியினர் ஒருமித்த குரலோடு நீட் தேர்வை எதிர்த்து, மத்திய பாஜக அரசைத் தட்டிக் கேட்கிறது. இதுபோல, மாணவர்கள், தொழிலாளர்கள் மற்றும் மாநில உரிமைகளைப் பறிக்கக் கூடிய விஷயங்களுக்காக திமுக போராடி வருகிறது.

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் - தூத்துக்குடியில் கனிமொழி பரப்புரை

மத்திய பாஜக அரசு இந்தியாவில் இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சித்து வருவதாக நாடாளுமன்றத்தில் குறிப்பிட்டுப் பேசினார்கள்.

ஒன்று, பணக்காரர்களை மேலும் பணக்காரர்களாக மாற்றுவது. மற்றொன்று ஏழைகளை மேலும் ஏழைகளாக மாற்றுவது. இதில், பாஜக ஆளும் மாநிலங்களில் மக்களுக்குச் சரியான சாலை வசதி கிடையாது. கழிப்பிட வசதி கிடையாது.

அதிமுக, பாஜக இரண்டும் ஒரே முகம்தான்

நமது திருமணத்தைக் கூட, அங்கு நம் விருப்பப்படி அமைத்துக்கொள்ள முடியாது. அங்கு மக்களுக்குச் சுதந்திரம் கிடையாது. ஆனால், தமிழ்நாட்டிலே பாஜக இவ்வளவு நாளும் அதிமுக மீது ஏறி சவாரி செய்து கொண்டிருந்தனர். இப்போது தனியே தேர்தலைச் சந்திப்பதாக அறிவித்துள்ளனர். உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக, பாஜக என தனித்தனியே இரண்டு முகமாக வந்தாலும் இரண்டும் ஒரே முகம்தான் என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

மக்கள் தேவையறிந்த ஸ்டாலின்

திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் பரப்புரையின்போது பெறப்பட்ட கோரிக்கை மனுக்களில் மக்கள் தேவையறிந்து ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார். முந்தைய ஆட்சியில் தூத்துக்குடி மாநகராட்சி மக்கள் மழைக் காலங்களில் சிரமத்திற்கு உள்ளாகியிருந்தனர். இதற்குச் சரியாகத் திட்டமிடப்படாத ஸ்மார்ட் சிட்டிப் பணிகளே காரணம்.

ஆனால், திமுக ஆட்சி அமைந்ததும், இந்தமுறை மழைக்காலத்தில் மக்களுக்குச் சிரமங்கள் ஏற்படக்கூடாது என்பதற்காக ஸ்மார்ட் சிட்டி திட்டக் குறைகளை ஆராய்ந்து, சரியாகத் திட்டமிடலுடன் பணிகளை விரைந்து முடித்ததன் விளைவாக இன்று நாம் பெரும் சிரமத்தைத் தவிர்த்துள்ளோம்.

நீங்கள் வாக்களிக்க வேண்டும்

இதுபோல தூத்துக்குடி மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் எண்ணற்ற திட்டங்களை திமுக தலைவர் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசு நிறைவேற்றி வருகிறது. படித்த இளைஞர் - இளம்பெண்களுக்கு உரிய வேலைவாய்ப்பை உருவாக்கும் பொருட்டு பர்னிச்சர் பூங்கா அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

எனவே, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்க மக்கள் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்க நாம் சரியானவர்களுக்கு வாய்ப்புத் தர வேண்டும்.

அதற்கு திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு வாய்ப்பு தந்தால் அவர்கள் உங்களுக்கும் அரசுக்கும் இடையே பாலமாகச் செயல்படுவார்கள். எனவே, மக்களுக்கான திட்டங்களைச் சரியாக உங்களிடம் கொண்டு வந்து சேர்பவர்க்கே நீங்கள் வாக்களிக்க வேண்டும்" எனக் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தமிழ் உணர்வை தூண்டி குளிர்காய நினைக்கும் ராகுல் காந்தி - பாரதி கவிதையை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி பேச்சு

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.