ETV Bharat / state

'பாஜகவினரிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்' - கனிமொழி - எச்சரிக்கை

பாஜகவினர் ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக்கூடியவர்கள், அதனால் நாம் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி கூறியுள்ளார்.

தூத்துக்குடி
தூத்துக்குடி
author img

By

Published : Aug 2, 2021, 4:02 AM IST

தூத்துக்குடி: சீவலப்பேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் அப்பகுதிக்கு குடிநீர் கிடைத்திடும் வகையில் குழாய்கள் பதிக்கும் பணிகளுக்கு தூத்துக்குடி மக்களவை உறுப்பினர் கனிமொழி அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் உள்ள மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.

தொமுச மூத்த உறுப்பினர் முத்துசாமி இயற்கை எய்திய நிலையில் அவரது இல்லத்திற்கு நேரில் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கனிமொழி எம்பி, "பாஜகவினர் ஒவ்வொரு விஷயங்களிலும் பல நிலைப்பாடு எடுக்கக் கூடியவர்கள். அதனால் நாம் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என கூறுகிறோம்.

கனிமொழி எம்பி பேட்டி

பெகாசஸ் விவகாரம் மிகப்பெரிய பிரச்னை. வெளியே எந்த பிரச்னையையும் நாங்கள் விவாதிக்க தயாராக இருக்கிறோம் என்று சொல்லக்கூடிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் அதனை விவாதிக்க தயாராக இல்லை. இது நாட்டின் பாதுகாப்பு தொடர்பான பிரச்னை. இதற்கு உள்துறை அமைச்சர் பதில் அளிக்க வேண்டும்.

பிரதமர் மோடி, குஜராத்தில் முதலமைச்சராக இருந்தபோது மாநில உரிமைகள் குறித்து பேசினார். ஆனால், இன்று ஒவ்வொரு மசோதாவிலும் மாநிலங்களின் உரிமை பறிக்கப்படுகிறது. இதுதான் அவர்களின் உண்மையான முகம்.

சமூக செயற்பாட்டாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பத்திரிகையாளர்கள், அரசியலில் இருக்கக்கூடியவர்கள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கும்போது, அதனை பற்றி அரசாங்கம் ஏன் விவாதிக்க தயங்குகிறது. தயாராக இல்லை என்று ஏன் சொல்கிறது.

இதனை விவாதிக்க கோரி எதிர்கட்சி தலைவர்கள் ஒட்டுமொத்தமாக கையெழுத்திட்டு கொடுத்துள்ளோம். ஆனால், அவர்கள் இதுபற்றி விவாதிக்க தயாராக இல்லை.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் வேறு எந்த விவாதத்துக்கான வாய்ப்பும் அங்கு இல்லை. அதனால் தவறு என்பது அரசாங்கத்தின் மேல் தான் உள்ளது. அவர்கள் அனைத்து எதிர்கட்சி தலைவர்களையும் அழைத்து பேசி தீர்வு காண வேண்டும் " என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், அமைச்சர் கீதாஜீவன், திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: பெகாசஸ் விவகாரம் - உச்ச நீதிமன்றத்தை நாடும் எதிர்கட்சிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.