ETV Bharat / state

‘பயிர்களுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயம் செய்யக்கூட அரசுக்கு அக்கறை இல்லை’ - கனிமொழி - ஆர்ப்பாட்டம் நடத்திய கனிமொழி

தூத்துக்குடி: மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நிரந்தரமான விலையை நிர்ணயம் செய்யக்கூட தமிழ்நாடு அரசுக்கு அக்கறை இல்லை எனக் கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்..

வேளாண் சட்டங்களை எதிர்த்து கனிமொழி ஆர்ப்பாட்டம்

author img

By

Published : Sep 28, 2020, 9:43 PM IST

விவசாயிகளையும், சிறு வணிகர்களையும் பாதிக்கும் வகையில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. இந்தச் சட்டங்களைத் திரும்பப்பெறக் கோரியும், மத்திய அரசுக்குத் துணைபோகும் அதிமுக அரசைக் கண்டித்தும், திமுக கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அந்த வகையில் தூத்துக்குடியில் திமுக சார்பில் நாடாளுமன்றக் குழுத் துணைத் தலைவரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி எம்.பி. தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில், தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், சட்டப்பேரவை உறுப்பினருமான கீதாஜீவன், திமுக வடக்கு மாவட்டச் செயலாளர் ரமேஷ், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி, திமுக கூட்டணி கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இந்தச் சட்டங்கள் அவசர அவசரமாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன. விவசாயிகளைப் பாதிக்காத வகையில் இந்தச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும். அதுவரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கனிமொழி ஆர்ப்பாட்டம்

மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களுக்கு நிரந்தர விலை நிர்ணயம் செய்வதில்கூட தமிழ்நாடு அரசுக்கு அக்கறை இல்லை. இது குறித்து விவசாயிகளுக்குப் புரிதல் ஏற்பட்டதால்தான் ஆங்காங்கே போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

மேலும், இப்போது நடைபெறும் இதுபோன்ற போராட்டங்கள் வாயிலாக அனைத்து விவசாயிகளுக்கும் இந்தச் சட்டங்கள் குறித்து தெளிவாகப் புரியும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு: கோவையில் திமுக ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.