ETV Bharat / state

‘ஆளுநர் இல்லாவிட்டால் சிக்கல்கள் இருக்காது’ - கனிமொழி எம்பி - கனிமொழி எம்பி

ஆன்லைன் ரம்மி தடை சட்டம் காலாவதியானது குறித்த கேள்விக்கு, ஆளுநர் பதவியே காலாவதியாகி தான் உள்ளது, அந்த பதவி இல்லையென்றால் சிக்கல் இருக்காது என கனிமொழி எம்பி பதிலளித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat
author img

By

Published : Nov 28, 2022, 5:15 PM IST

தூத்துக்குடி: தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அரசுப் பள்ளிகளில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் அறிவியல் மனப்பான்மையை மேம்படுத்துவதற்கான முதன்முறையாக "வானவில் மன்றம்' என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவை இணைந்த செயல் திட்டமாகும். இத்திட்டம் தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் முதன்முறையாக மேற்கொள்ளப்படும் ஒரு புதுமையான முயற்சியாகும். இதனை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (நவ.28) தொடங்கி வைத்தார்.

அதனடிப்படையில், திமுக துணை பொதுச் செயலாளரும், தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி இன்று (நவ.28) தூத்துக்குடி, சிவந்தகுளம் சாலையில் உள்ள சிவந்தாகுளம் பள்ளியில் இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர், கனிமொழி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது, ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கான தடை சட்டம் நேற்றுடன் காலாவதியானது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு? “ஆளுநர் பதவியே காலாவதியாக தான் இருக்கிறது. இதை பலமுறை கூறி வருகிறோம். அந்த பதவி இல்லை என்றால் தற்போது ஆன்லைன் ரம்மியை ஒழித்திருக்க முடியும்.

ஆளுநர் என்பது தேவையில்லாத ஒன்று, அந்த பதவி இல்லாமல் இருந்தால் பல சிக்கல்கள் இருக்காது. எதற்காக இவர்கள் இந்த ஆன்லைன் ரம்மியை பாதுகாக்க துடிக்கிறார்கள் என தெரியவில்லை” என்றார்.

கனிமொழி எம்பி பேச்சு

இதையும் படிங்க: ஆன்லைன் ரம்மி; விளைவுகள் ஆளுநருக்கு நன்றாக தெரியும் - அமைச்சர் ரகுபதி!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.