ETV Bharat / state

"இன்டர்நெட் இல்லாமல் வாழ்வது வாய்ப்பில்லாத ஒன்று" - எம்.பி கனிமொழி பேச்சு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 22, 2023, 2:21 PM IST

காமராஜ் கல்லூரியில் நடைபெற்ற சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம் கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இன்டர்நெட் இல்லாமல் வாழ்வது வாய்ப்பில்லாத ஒன்று” எம்.பி கனிமொழி பேச்சு

தூத்துக்குடி: காமராஜ் கல்லூரியில், தேசிய சைபர் பாதுகாப்பு ஆய்வு நிறுவனம் மற்றும் தமிழ்நாடு மாநில மகளிர் ஆணையம் சார்பில் "சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான சைபர் குற்றம்" என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், திமுக துணைப் பொதுச் செயலாளர் மற்றும் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்து கொண்டு கருத்தரங்கு விழாவை துவக்கி வைத்து சிறப்புரையாற்றினார். அப்பொழுது பேசிய அவர், "நாம் பெண்கள், பாதுகாக்கப்பட வேண்டியவர்கள், நாம் உடலைப் பார்த்து வெட்கப்பட வேண்டும், முழுவதுமாக ஆடை அணிந்து வெளியே வரவேண்டும் மற்றும் ஆண்கள் பெண்களைத் தவறாகப் பார்ப்பதற்குப் பெண்கள் தான் பொறுப்பு என்று சொல்லி வளர்ப்பார்கள்.

மேலும், தனக்குப் பிடித்த உடை அணிந்து பெண்கள் கல்லூரிக்குச் செல்ல முடியாது. மற்றவர்கள் கண்களுக்கு உறுத்தக்கூடாது என்று சொல்வார்கள். ஆனால், அந்த பிள்ளைகளிடம் நீ எந்த பெண்ணையும் தவறாகப் பார்க்கக்கூடிய உரிமை உனக்கு கிடையாது என சொல்லிக் கொடுத்து வளர்ப்பதில்லை" என்று கூறினார்.

இதையும் படிங்க: பிரியாணி கடையில் தகராறு... இளைஞர் வெட்டிக் கொலை.. 3 பேர் கைது!

தொடர்ந்து பேசிய அவர், "நீ (பெண்கள்) பத்திரமாக இரு, நீ இப்படி ஆடை அணி, நீ இப்படி இரு, நீ வெளியில் போகாத, இந்த தடைகளை உடைத்து சாதிக்க வேண்டிய காலத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம். டெக்னாலஜி முன்னேற்றத்தினால் பல தடைகள் வரும். வீட்டுக்குள் இருக்கும் பெண்களுக்கு பிரச்சினைகளும், ஆபத்துகளும் வருகிறது. அந்த பிரச்சினைகளால் நாம் முடங்கி விடக்கூடாது. நாம் பிறக்கும் பொது நம்மோடு பிறந்த இந்த உடல் அதை வைத்து யாரும் நம்மைக் கொச்சைப்படுத்த அனுமதிக்கக் கூடாது அந்த சக்தி நமக்கு இருக்க வேண்டும்" என்று கூறினார்.

மேலும், "சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட புகைப்படத்திற்கு யாரும் லைக் பண்ண மாட்டார்கள் என்று வருத்தப்படக்கூடாது. அதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். அடுத்து நம் உடலை நாம் ஏற்றுக் கொள்ள வேண்டும். நான் ஒரு பெண் இப்படித்தான் படைக்கப்பட்டிருக்கிறேன், என்னை இப்படித்தான் உருவாக்கியிருக்கிறது. அந்தப் பெருமிதமும், திமிரும் இங்க இருக்கக்கூடிய ஒவ்வொரு பெண்ணுக்கும் இருக்க வேண்டும். அதை வைத்துக்கொண்டு, யாரும் உங்களை மிரட்டவோ உருட்டவோ அனுமதிக்கக்கூடாது. நீங்கள் உயிரோடு இருக்கும் வரை தான் வாழ்க்கை எனவே எந்த பிரச்சினையாக இருந்தாலும், உங்களை மதிப்பீடு செய்ய யாருக்கும் உரிமை இல்லை(Nobody has a Rights to Judge You)" என்று கனிமொழி எம்.பி. கூறினார்.

இதையும் படிங்க: பல்பிடுங்கிய பல்வீர் சிங் வழக்கு.. அரசுக்கு அதிரடி உத்தரவு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.