ETV Bharat / state

இரட்டை தலைமை பழக்கமான ஒன்றுதான் - கடம்பூர் ராஜூ - kadampur_raju_pressmeet_

இரட்டை தலைமை பழக்கமான ஒன்றுதான் என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

s
s
author img

By

Published : Sep 28, 2021, 7:09 AM IST

தூத்துக்குடி: கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட சங்கரலிங்கபுரத்தில் உள்ள 9 தெருக்களில் சிறப்பு சாலை திட்டத்தில் 2 கோடியே 57 ஆயிரம் ரூபாய்க்கு பேவர் பிளாக் அமைக்கும் பணியை கடம்பூர் செ.ராஜூ தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து சி.பா ஆதித்தனாரின் 116 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலத்தில் ஆதித்தனார் உருவ படத்திற்கு முன்னாள் அமைச்சர் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினர் கடம்பூர் ராஜூ மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகளை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களை சந்திதத அவர், “ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள தென்காசி மாவட்டத்துக்கு அதிமுகவுக்கு பொறுப்பாளராக பணியாற்றி வருகிறேன். தென்காசியை தலைமையிடமாக கொண்டு மாவட்டத்தை கொடுத்தது அதிமுக அரசு. இது மக்கள் மனதில் பசுமையாக உள்ளது. அங்குள்ள 5 சட்டப்பேரவை தொகுதிகளில் 2 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், ஊரக பகுதிகளில் அதிமுக தான் அதிக வாக்குகளை பெற்றுள்ளது.

மக்கள் எழுச்சி

தென்காசி மாவட்டத்திலுள்ள 14 மாவட்ட ஊராட்சி , 12 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இங்கு 100 விழுக்காடு வெற்றியை அளிக்கும் அளவில் மக்கள் எழுச்சியுடன் உள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தல் என்றால் உள்ளூர் பிரச்சினையை மையமாக வைத்து நடக்கிறது.

கட்சிகள் என்ன தான் அரசியல் ரீதியாக கூட்டணி அமைத்தாலும், தலைவர்கள் மட்டத்தில் உடன்பாடு ஏற்பட்டாலும், அதையும் தாண்டி கீழ் மட்டத்தில் உள்ளூர் சூழ்நிலைகளுக்கு ஏற்ப சில வேட்பாளர்கள் போட்டியிடுவது இயற்கை. எதிர்கட்சி தலைவரின் ஆலோசனையின்படி போட்டி வேட்பாளர்களாக போட்டியிடுபவர்களை அழைத்து பேசி சரி செய்யப்படுகிறது.

மேலும், திமுக ஆளும்கட்சியாக வந்த 4 மாதங்களில் தேர்தலின்போது வழங்கிய 505 வாக்குறுதிகளில் 202 வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுவிட்டது என பெருமையாக கூறுகிறார். ஆனால், அவர்கள் முக்கியமாக தேர்தல் அறிக்கையில் தெரிவித்த நீட் தேர்வு இன்று காணல்நீராகி விட்டது. மாணவர்களின் எதிர்காலம் கேள்விகுறியாகிவிட்டது. 3 பேர் உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனர். ஏனென்றால், திமுக ஆட்சிக்கு வந்தால், இந்தாண்டே நீட் தேர்வு இருக்காது என்று மேடை தோறும் முதலைமைச்சர் உத்தரவாதம் அளித்தார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜூ

இலவச பேருந்து திட்டம்

குடும்ப தலைவிகளுக்கு ரூ.1000, கூட்டுறவு வங்கி நகை கடன் தள்ளுபடியில் சில கட்டுபாடுகளை விதித்ததால் 40 விழுக்காடு பேர் மட்டுமே பயனடையும் நிலை உள்ளது.

தாலிக்கு தங்கம் திட்டத்தில் நிபந்தனை விதித்துள்ளனர். மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை அறிமுகப்படுத்தி, அம்மா இருசக்கர வாகன திட்டம் தேவைப்படாது என கூறுகின்றனர். ஜெயலலிதா கொண்டு வந்த காரணத்தால் இந்த திட்டத்தை எடுக்கின்றனர்.

இப்படி 4 மாதங்களிலேயே மக்கள் பெரும் ஏமாற்றத்தில் உள்ளனர். அவர்களுக்கு வாக்களித்தவர்கள் கூட வருத்தப்படும் நிலை உள்ளது. திமுக ஆட்சி ஏமாற்றத்தை தந்துள்ளது. இது நிச்சயம் ஊரக உள்ளாட்சி தேர்தலில் எதிரொலிக்கும். குறிப்பாக தென்காசி மாவட்டத்தில் அதிமுக 90 விழுக்காட்டிற்கும் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது.

9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம்

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து தான் அறிக்கைகள் விடுகின்றனர். சட்டப்பேரவையிலும் இணைந்து தான் பணியாற்றினர். ஒருங்கிணைப்பாளர் வீட்டில் நடந்த துக்க நிகழ்ச்சியால், அவர் சட்டப்பேரவையில் கலந்து கொள்ள முடியாத நிலை இருந்தது. இதனால் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக இணை ஒருங்கிணைப்பாளர் முதற்கட்டமாக 9 மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். ஆனால், ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., அங்கிருந்தே எங்களுக்கு ஆலோசனை கூறுகிறார்.

இரண்டு பேரும் ஒருமித்த கருத்துடன் தான் உள்ளனர். இரட்டை தலைமை என்பது எங்களுக்கு பழகிப்போன ஒன்று. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் இரட்டை தலைமையில் தான் நாடாளுமன்ற தேர்தல், சட்டப்பேரவை தேர்தலை சந்தித்துவிட்டோம். இதில் ஒருமித்த கருத்துடன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். எந்தவித கருத்து வேறுபாடு ஏற்படவில்லை. எனவே அதில் எந்த பிரச்சினையும் எழ வாய்ப்பில்லை.

கோவில்பட்டி பிரதான சாலையில் ஓடை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கடைகள் அகற்றப்பட்ட பின்னர், அங்கு இருபுறமும் தடுப்பு சுவரும், காங்கிரீட் தளமும் அமைக்க அதிமுக ஆட்சியில் திட்டம் தீட்டப்பட்டிருந்தது. இதற்கு 14 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்ய தற்போது நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சரிடம் வலியுறுத்தியுள்ளேன்” என்றார்.

இதையும் படிங்க: 'சேகர் ரெட்டி டைரியில் என் பெயர் எனும் தகவல் தவறு' - அமைச்சர் செந்தில் பாலாஜி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.