ETV Bharat / state

'மாஸ்டர் விஜய்க்கு நன்றி'- கடம்பூர் ராஜூ - வேளாண் பாதுகாப்பு சட்டம்

மாஸ்டர் படக்குழு மற்றும் நடிகர் விஜய்க்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ நன்றி தெரிவித்தார்.

மாஸ்டர் விஜய்க்கு நன்றி கடம்பூர் ராஜூ மாஸ்டர் விவசாயிகள் பிரச்னை Kadambur raju thanks to actor Vijay Kadambur raju actor Vijay 2ஜி வழக்கு ஆ.ராசா வேளாண் பாதுகாப்பு சட்டம்

author img

By

Published : Dec 4, 2020, 6:43 PM IST

Updated : Dec 4, 2020, 7:33 PM IST

தூத்துக்குடி: அமைச்சர் கடம்பூர் ராஜூ மாஸ்டர் படக்குழு மற்றும் நடிகர் விஜய்க்கு நன்றி தெரிவித்தார். அப்போது, ஒ.டி.டி, போன்ற தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது அல்ல என தாம் ஏற்கனவே கூறியுள்ளதையும் அவர் நினைவுக் கூர்ந்தார்.

கோவில்பட்டி கடம்பூரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “புரெவி புயல் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. இதன் காரணமாக பெய்யும் மழையை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் தயார்நிலையில் உள்ளன.
திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் தான் காலம் காலமாக இருந்து வருகிறது. அதற்கு அடுத்தப்படியாக அவர்களாக அந்த அமைப்பில் இருந்து ஒன்றிரண்டு பேர் சங்கத்தை தோற்றுவிப்பதற்கு, அவர்களுக்கு உரிமை உண்டு. ஆனால், திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் என்றால் தற்போது வெற்றி பெற்றிருப்பவர்கள் தான்.

2ஜி வழக்கு - ஆ.ராசா
2ஜி விவகாரத்தில் என்ன நடந்தது என்பது நாட்டு மக்களுக்கு தெரியும். சிபிஐ, அமலாக்கப்பிரிவு மேல்முறையீடு செய்துள்ளது. அங்கே போய் ஆ.ராசா விவாதித்து வெளியே வந்தால் நல்லது. வெளியே வர முடியாது என ராசாவுக்கு தெரியும்.

இங்கே விவாதிக்க தயாரா எனக் கூறுபவர், அன்றைக்கே நீதிமன்றத்தில் விவாதித்திருந்தால் அவரும், கனிமொழியும் சிறை சென்றதை தவிர்த்திருக்கலாம். நீதிமன்றம் யாரையும் தவறாக சிறைக்கு அனுப்ப மாட்டார்கள். அவர்கள் தற்போது தற்காலிகமாக விடுவிக்கப்பட்டு உள்ளனர்.

விவசாயிகள் பிரச்னை

இந்த வழக்கின் மேல்முறையீட்டில் என்ன நிலைமை வரும் என அவர்களுக்கும், நாட்டு மக்களுக்கும் நன்றாக தெரியும். அரசியலுக்காக முதலமைச்சருக்கு சவடால் விடுபவர், அந்த வழக்கில் இருந்து விடுபட்டு வரட்டும் பார்க்கலாம்.
வேளாண் சட்டங்கள் தமிழக முதல்வர் தெளிவாக தெரிவித்துள்ளார். மத்திய அரசு கொண்டு வருவதற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பே வேளாண் பாதுகாப்பு சட்டத்தை தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ளது. இதில், ஒரு விவசாயி கூட பாதிக்கப்படவில்லையென முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

வேளாண் பாதுகாப்பு சட்டம்

இந்த நிலையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களை எதிர்க்க தேவையில்லை. இந்த வேளாண் பாதுகாப்பு சட்டம், உண்மையிலேயே தமிழ்நாட்டை பொறுத்தவரையில் வேளாண் குடிமக்களுக்கு பாதுகாப்பாக உள்ளது என்பது தான் எங்களது கருத்து.

'மாஸ்டர் விஜய்க்கு நன்றி'- கடம்பூர் ராஜூ
நடிகர் விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் ஜன.13ஆம் தேதி வெளியிடப்போவதாக அந்த படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். ஒ.டி.டி., போன்ற தளங்களில் திரைப்படங்களை வெளியிடுவது உகந்தது அல்ல என நான் ஏற்கெனவே தெரிவித்துள்ளேன்.

மாஸ்டர் விஜய்க்கு நன்றி

கரோனா காலத்தில் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தால், ஓ.டி.டி.என்பது தற்காலிக ஏற்பாடு. இது நிரந்தரமாக இருக்கக் கூடாது என கூறியிருந்தேன். எனது கருத்தை ஏற்று மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் தான் வெளியிடுவோம் எனப் படக்குழுவினர் சொன்னதற்கு நடிகர் விஜய், தயாரிப்புக்குழுவுக்கு நன்றி. அவர்கள் சிறப்பு காட்சிக்கு அனுமதி கேட்டால் அரசு பரிசீலிக்கும்” என்றார்.

இதையும் படிங்க: “திமுகவின் ஆட்சிவெறி ஒருபோதும் வெல்லாது”- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Last Updated : Dec 4, 2020, 7:33 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.