ETV Bharat / state

‘சசிகலா ஆடியோ குறித்து கருத்து கூறுவது சரியில்லை’-கடம்பூர் ராஜூ!

author img

By

Published : Jun 17, 2021, 3:41 AM IST

தூத்துக்குடி: கட்சியின் அடிப்படை உறுப்பினராகக்கூட இல்லாத சசிகலாவின் ஆடியோ குறித்து கருத்து கூறுவது சரியில்லை என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு
செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனையில் கம்மவார் சங்கம் (லண்டன்) சார்பாக ஆக்சிஜன் சிலிண்டர், ஆக்சிஜன் செறிவூட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர், அதிமுக சட்டப்பேரவை பொருளாளர் கடம்பூர் செ.ராஜூ கலந்து கொண்டு ஆக்சிஜன் சிலிண்டர், செறிவூட்டிகளை மருத்துவர்களிடம் வழங்கினார்.

இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் , “தமிழ்நாடு அரசு கரோனாவை கட்டுப்படுத்தப் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தாலும் கூட பல்வேறு அமைப்பினர், தன்னார்வலர்கள் தங்களால் முடிந்தளவு பல்வேறு உதவிகளை செய்து வருகின்றனர். அவர்களுக்கு இந்த நேரத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

தொடர்ந்து சசிகலா ஆடியோ குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், “அதிமுக கட்சியைப் பற்றி விமர்சிப்பவர்கள் ஒரு தொண்டனாக இருக்க வேண்டும். சசிகலா, அதிமுக அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து நீக்கப்பட்டவர். அவர் கூறும் செயலுக்கும், சொல்லுக்கும் பதில் கூறுவது சரியுமில்லை, தேவையுமில்லை” என்று தெரிவித்தார்.

மேலும், அதிமுக ஜாதி கட்சி என சசிகலா கூறியுள்ள கருத்துக்கு கூறியதாவது, “அதிமுகவை யாரும் சாதி சாயம் பூச முடியாது. முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் காலத்திலும் சரி, ஜெயலலிதா காலத்திலும் சரி, தற்போது இபிஎஸ் ஓபிஎஸ் காலத்திலும் சரி எப்போது அவ்வாறு கிடையாது. இவர்கள் பேசுவதெல்லாம் செய்தியாகுமே தவிர மக்கள் யாரும் அதை நம்ப மாட்டார்கள்” என்றார்.

செய்தியாளர்களைச் சந்தித்த கடம்பூர் ராஜு

தொடரந்து பேசிய அவர், அதிமுக ஆட்சி காலத்தில் கரோனா 90 விழுக்காடு குறைந்த பின்னரே டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சியில் கரோனா இன்னும் முழுமையாக குறையாத நிலையில் ஊரடங்கு தளர்வுகளுள்ள நிலையில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது. இது தான் திமுகவின் நிலைப்பாடு என்றார்.

இதையும் படிங்க: அதிமுகவில் இரட்டை தலைமை தான் நீடிக்கிறது - முன்னாள் அமைச்சர் காமராஜ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.