ETV Bharat / state

திமுகவை வீட்டுக்கு அனுப்பப்போவது பிடிஆர் தான் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு - Thoothukudi District News

'நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வெளிநாட்டில் படித்து வங்கி வேலை பார்த்தவர், அவருக்கு தமிழக மக்களின் வாழ்வாதாரமும் தெரியாது, இதுவரை எந்த மாற்றமும் கொண்டுவரவில்லை' என முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ குற்றம் சாட்டினார்.

திமுகவை வீட்டுக்கு அனுப்பப் போவது பிடிஆர் தான்;

author img

By

Published : Jan 4, 2023, 6:35 PM IST

திமுகவை வீட்டுக்கு அனுப்பப்போவது பிடிஆர் தான் - கடம்பூர் ராஜூ குற்றச்சாட்டு

தூத்துக்குடி: கோவில்பட்டி சாத்தூர் மெயின் ரோட்டில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து மக்கள் பயன்பாட்டிற்காக ரூ.9 லட்சம் மதிப்புள்ள புதிய கட்டப்பட்ட பேருந்து நிழற்குடையை, முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.

பின்னர் முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறுகையில்; "கோவில்பட்டியில் 82 ஆண்டுகளாக இருந்த ஆக்கிரமிப்புகள் உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்பெயரில் அகற்றப்பட்டது. 100க்கும் மேற்பட்ட கடைகள் அகற்றப்பட்டன, தடுப்புச் சுவர் அமைப்பதற்காக 14 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

பின்னர் தேர்தல் நடைமுறை காரணத்தால் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. ஆனால், தற்போது திமுக ஆட்சி அதை நடைமுறைப்படுத்தவில்லை. உச்ச நீதிமன்ற நடைமுறைப்படி தான் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. இந்த அரசு செய்யவில்லை. அதையும் மீறி ஆக்கிரமிப்பு என்ற பெயரில் தற்போது ஆக்கிரமித்தால் அதுக்கு உடந்தையாக இருந்த அதிகாரிகள் சிறைக்குச் செல்வார்கள்.

இது நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு ஆளாகும், இதைப் புரிந்து கொண்டு அதிகாரிகள் செயல்பட வேண்டும். இல்லையென்றால் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடரப்படும். நிதியமைச்சர் மெத்த படித்தவர். அவருக்கு அமெரிக்காவின் பொருளாதாரம் பற்றி தெரியுமே தவிர தமிழ்நாட்டின் பொருளாதாரம் தெரியாது. ஏனென்றால், அவர் நிதி அமைச்சராக ஆன பின்பு ஆக்கப்பூர்வமாக இதுவரை நிதிச்சுமையை கையாண்டு என்ன மாறுதல் கொண்டு வந்திருக்கிறார், என்ன செய்திருக்கிறார்.

சட்டமன்றத்தில் அவர் பேசினால் அவருக்கு மட்டும் தான் புரியும். மற்றவர்களுக்குப் புரியாது, மற்றவர்களுக்கு புரியாது போல் பேசுவார், மற்றவர்களெல்லாம் படிக்காதது போல் பேசுவார். தமிழ்நாட்டு மக்களின் யதார்த்த நிலை அவருக்குத் தெரியாது. அவர் படித்ததெல்லாம் அமெரிக்கா போன்ற மேலைநாடுகளில் தான். பிடிஆரின் வாரிசாக இருக்கலாம். அவருடைய பேரனாக இருக்கலாம், அந்த வகையில் திராவிடத்துக்கு சொந்தக்காரராக இருக்கலாம்.

ஆனால், அவர் வளர்ந்த விதம் படித்தது எல்லாம் மேலை நாடுகளில் மேலைநாட்டு நகரத்தில்... அது போக அமெரிக்காவில் உள்ள வங்கியில் பணியாற்றியவர். இதனால் தான் அங்கு உள்ள பொருளாதாரத்தை வைத்து செயல்படுகின்றாரே தவிர, இங்கு உள்ள ஏழை மக்களுக்கு, விவசாயிகளுக்கு பயனளிக்கின்ற வகையில் அவருடைய பொருளாதாரத்துவம் இல்லை என்பது எங்களின் குற்றச்சாட்டு. இப்படியே தொடர்ந்தால் இந்த அரசை வீட்டுக்கு அனுப்புவதில் முதல் ஆளாக பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இருப்பார்" எனக் கூறினார்.

இதையும் படிங்க: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா மரணம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.