தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, சுவாமி தரிசனம் மேற்கொண்ட பின்னர் சத்திரப்பட்டி, சத்திரப்பட்டி காலனி, வில்லிசேரி, இடைசெவல், நாலாட்டின் புதூர், மெய் தலைவன்பட்டி, ரயில்வே காலனி, முடுக்கு மீண்டான்பட்டி ஆகிய பகுதிகளில் வீடுவீடாகச் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது மக்கள் அவருக்கு ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
தொடர்ந்து தேர்தல் பரப்புரையில் ஈடுபட்ட அமைச்சர் கடம்பூர் ராஜு, “அரசு வேலையிலேயே ஒருவருக்கு பதிலாக இன்னொருவர் பணிசெய்ய முடியாது. ஆனால், இவர் (டிடிவி தினகரன்) ஜெயித்தால் டெபுடேஷன் போடுவேன் எனக் கூறுகிறார். ஆனால், நான் கோவில்பட்டி சட்டப்பேரவை உறுப்பினராக ஜெயித்தவுடன், எனக்கு பதிலாக மற்றொருவர் தான் தொகுதியை கவனித்துக் கொள்வார் என்று சொல்லும் ஒரே அரசியல் கட்சி அமமுக தான்.
தான் தோற்றாலும் பிறர் ஜெயிக்கக் கூடாது என இவர் (டிடிவி தினகரன்) எண்ணுகிறார். பிறரைப் போல் கோவில்பட்டி மக்கள் கெடுத்து பழக்கப்பட்டவர்கள் அல்ல, கொடுத்து பழக்கப்பட்டவர்கள். அதிமுகவையே கோவில்பட்டி சட்டப்பேரவை மக்கள் ஆதரிப்பார்கள்” என டிடிவி தினகரனை மறைமுகமாக சாடினார்.
இதையும் படிங்க: கமலுக்காக கோவை தெற்கு தொகுதியை விட்டுக் கொடுத்த மன்சூர் அலிகான்!