தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் காவல் துறை பிடியில் உயிரிழந்த ஜெயராஜ், பென்னிக்ஸின் உறவினர்களை சந்தித்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அவர், "ஜெயராஜ், பென்னிக்ஸ் விவகாரத்தில் அநாகரிகமான சம்பவம் நடந்துள்ளது. சட்டப்படியான நடவடிக்கை தொடரவேண்டும். இந்த விசாரணை முடிவு பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு மருந்தாக அமைய வேண்டும். விசாரணை நடக்கும் பாதை சரியாக உள்ளது. இதனால் தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படுவார்கள்.
இந்த குடும்பத்திற்கு நியாயம் கிடைக்கும். அதற்கு நாங்கள் துணை நிற்போம். நீதிமன்றம், தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் மக்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் இருப்பதால்தான் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்படும் நிலையில் உள்ளனர்" என்றார்.
இதையும் படிங்க : தனியார்மயமாக்கலை நோக்கி செல்லும் ரயில்வேதுறை!