ETV Bharat / state

வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல்  திருநங்கை செவிலி! - திருநங்கை செவிலியர்

தூத்துக்குடி: தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் இருந்தால் பாலினமும் தடையில்லை என நாட்டின் முதல் செவிலியாக திருநங்கை அன்புரூபி நியமிக்கப்பட்டுள்ளது பல்வேறு தரப்பினர் மத்தியிலும் பாராட்டுகளைப் பெற்றுவருகிறது.

indias_first_transgender_nurse
indias_first_transgender_nurse
author img

By

Published : Dec 5, 2019, 11:03 PM IST

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைகாரன்மடம் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் அன்புராஜ். இவர், ரத்னபாண்டி - தேன்மொழி தம்பதிக்கு மகனாகப் பிறந்தார். தந்தை ரத்னபாண்டி பார்வையற்றவராவார். தாயாரின் உழைப்பிலேயே தன் ஆரம்ப கல்வி முதல் செவிலிய பட்டப்படிப்பு வரை பயின்று முன்னேறியிருக்கிறார்.

திருநங்கை  அன்புரூபி
திருநங்கை அன்புரூபி

பள்ளிப்பருவ வயதிலேயே தனக்குள் ஏற்பட்ட உளவியல் மாற்றத்தையும் உடல் ரீதியான மாற்றத்தையும் உணர்ந்த அன்புராஜ், அன்புரூபியாக மாறியிருக்கிறார். திருநங்கையாக மாறிய பின் கல்லூரி பருவத்தில் உள்ளூரிலும் வெளியிடங்களிலும் சமூக ரீதியாக பல தடைகள், இன்னல்களை அவர் சந்தித்துள்ளார். பொது சமூகத்தால் புறக்கணிப்பு, உறவினர்களால் நிராகரிப்பு, நண்பர்களின் கேலி கிண்டல்கள் என அத்தனையையும் கடந்து, தடைகளைக் தகர்த்து, குமரி மாவட்டம் காவல்கிணற்றில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் தனியார் மருத்துவமனையில் செவிலிய படிப்பை வெற்றிகரமாகப் படித்து முடித்தார்.

பின் அங்குள்ள மருத்துவமனையிலேயே செவிலியாகவும் பணியாற்றினார். கடந்த இரண்டாண்டாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அவர், செவிலி பணிக்கான தமிழ்நாடு அரசு அறிவிப்பைத் தொடர்ந்து அரசுப் பணிக்கான தேர்வை எழுதி அதில் வெற்றியும் பெற்றார். இதன்மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி என்ற பெருமையை பெற்றுள்ளார்.

இந்தப் பணிக்கான ஆணையை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார். திருச்சியிலுள்ள மருத்துவமனையில் செவிலியாக பணியமர்த்தப்பட்டுள்ள அன்புரூபி, தனக்கு சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பு கேட்டு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் செவிலியாக பணிசெய்ய அரசு ஆணை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அன்புரூபி ஆவலாக உள்ளார்.

இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியான அன்புரூபிக்கு பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்துவருகின்றனர். பெரும்பாலும் திருநங்கையர்களை பெற்றோர் புறக்கணிக்கும் நிலையில், திருநங்கையாக மாறிய பின்னும் தன் பிள்ளையை ஒதுக்கி தள்ளாமல் அவரின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு அன்புரூபியின் லட்சியத்தை அடைய பக்கபலமாக நின்றிருக்கிறார் அவருடைய தாயார் தேன்மொழி.

திருநங்கையர்கள் தன்னம்பிக்கை, விடாமுயற்சியுடன் கல்வியை கற்றால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை அன்புரூபி நிரூபித்திருக்கிறார். பல சமூக இடையூறுகளுக்கிடையே அரசு வழங்கிய இந்த அங்கீகாரம் தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அன்புரூபியின் தாயார் தேன்மொழி கூறினார்.

திருநங்கை அன்புரூபி அரசுப் பணியை பெற்றுள்ளது குறித்து அவரது தோழி ஜெஸ்ஸி கூறுகையில், ''அன்புவை எனக்கு கடந்து ஓராண்டாகத் தெரியும். அவள் என்னென்ன தர்மசங்கடங்களைச் சந்திக்கிறாள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி ஒன்றுதான் ஒரு மனிதனை முன்னேற்றும்.

தன்னம்பிக்கை இல்லாமல் சந்திக்கிற பிரச்னைகள் நமக்கு தீர்வு தராது. அன்புரூபியை நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவளுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன். திருநங்கைகளை நிறைய பேர் தங்களுடைய குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டதும் தவறான தொழில்களுக்கு தள்ளப்படுகிறார்கள். திருநங்கையர்களை குடும்பத்தில் நாம் ஏற்றுக்கொண்டால் அன்பு மாதிரி நிறைய பேர் முன்னேறிவருவதை நாம் சமுதாயத்தில் பார்க்க முடியும்'' என்றார்.

திருநங்கை அன்புரூபியின் தாயார்

Intro:தன்னம்பிக்கை, விடாமுயற்சி இருந்தால் இலக்கை அடைய பாலினம் ஒரு தடையில்லை - நாட்டின் முதல் செவிலியரான திருநங்கை அன்புரூபி மகிழ்ச்சி

Body:
தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் அருகேயுள்ள சேர்வைகாரன்மடம் எனும் கிராமத்தை சேர்ந்தவர் அன்புரூபி. இவர், ரத்னபாண்டி - தேன்மொழி தம்பதியருக்கு மகனாக பிறந்தார்.
தந்தை ரத்னபாண்டிக்கு பார்வைகிடையாது. தாயாரின் உழைப்பிலேயே தன் ஆரம்ப கல்வி முதல் செவிலிய பட்டப்படிப்பு வரை பயின்று முன்னேறியிருக்கிறார் அன்புரூபி.

பள்ளி பருவ வயதிலேயே தனக்குள் ஏற்பட்ட உளவியல் மாற்றமும், உடல் ரீதியான மாற்றமும் உணர்ந்து அன்புராஜ், அன்புரூபியாக மாறியிருக்கிறார். திருநங்கையாக மாறிய பின்
கல்லூரி பருவத்தில் உள்ளுரிலும் வெளியிடங்களிலும் சமூக ரீதியாக பல தடைகள், இன்னல்களை அவர் சந்தித்துள்ளார். பொது சமூகத்தால் புறக்கணிப்பு, உறவினர்களால் நிராகரிப்பு, நண்பர்களின் கேலி கிண்டல்கள் என அத்தனையையும் கடந்து, தடைகளைக் தகர்த்து, குமரி மாவட்டம் காவல்கிணற்றில் உள்ள ஒரு தனியார் செவிலியர் கல்லூரியில் தனியார் மருத்துவமனையில் செவிலிய படிப்பை வெற்றிகரமாக படித்து முடித்தார். பின் அங்குள்ள மருத்துவமனையிலேயே செவிலியராகவும் பணியாற்றினார். கடந்த இரண்டாண்டுகளாக தனியார் மருத்துவமனையில் பணியாற்றிய அவர், செவிலியர் பணிக்கான தமிழகஅரசு அறிவிப்பை தொடர்ந்து அரசு பணிக்கான தேர்வை எழுதி அதில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
இந்த பணிக்கான ஆணையை நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதலைமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்கினார்.

திருச்சியிலுள்ள மருத்துவமனையில் செவிலியராக பணி அமர்த்தப்பட்டுள்ள அன்புரூபி, தனக்கு சொந்த மாவட்டத்தில் பணி வாய்ப்பு கேட்டு எதிர்ப்பார்த்து காத்திருக்கிறார். இன்னும் ஒரு சில நாட்களில் தூத்துக்குடி மாவட்டத்தில் செவிலியராக பணிசெய்ய அரசு ஆணை வழங்கும் என்ற எதிர்பார்ப்பில் அன்புரூபி ஆவலாக உள்ளார்.
இதன் மூலம் இந்தியாவின் முதல் திருநங்கை செவிலியர் என்ற பெருமையை அன்பு ரூபி பெறுகிறார்.

இந்தியாவின் முதல் திருநங்கை செயவிலியரான அன்புரூபிக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். பெரும்பாலும்
திருநங்கையர்களை பெற்றோர்கள் புறக்கணிக்க நிலையில், திருநங்கையாக மாறிய பின்னும் தன் பிள்ளையை ஒதுக்கி தள்ளாமல் அவரின் உணர்வுகளை புரிந்து கொண்டு அன்புரூபியின் லட்சியத்தை அடைய பக்கபலமாக நின்றிருக்கிறார் அவருடைய தாயார் தேன்மொழி.

திருநங்கையர்கள் தன்னம்பிக்கை மற்றும் விடாமுயற்சியுடன் கல்வியை கற்றால் சமூகத்தில் உயர்ந்த நிலையை அடைய முடியும் என்பதை அன்புரூபி நிரூப்பித்திருக்கிறார்.
பல சமூக இடையூறுகளுக்கிடையே அரசு வழங்கிய இந்த அங்கீகாரம் தனக்கு பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக அன்புரூபியின் தாயார் தேன்மொழி கூறினார்.

திருநங்கை அன்புரூபி அரசு பணியை பெற்றுள்ளது குறித்து அவரது தோழி ஜெஸ்ஸி கூறுகையில்..
அன்புவை எனக்கு கடந்து ஒரு வருடங்களாக தெரியும் அவள் என்னென்ன தர்மசங்கடங்களை சந்திக்கிறாள் என்பதை நான் நேரில் பார்த்திருக்கிறேன். தன்னம்பிக்கை, உழைப்பு, விடாமுயற்சி ஒன்றுதான் ஒரு மனிதனை முன்னேற்றும். தன்னம்பிக்கை இல்லாமல் சந்திக்கிற பிரச்சினைகள் நமக்கு தீர்வு தராது. அன்புரூபியை நினைக்கையில் எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. அவளுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கிறேன். திருநங்கைகளை நிறைய பேர் தங்களுடைய குடும்பத்திலிருந்து புறக்கணிக்கப்பட்டதும் தவறான தொழில்களுக்கு தள்ளப்படுகிறார்கள். திருநங்கையர்களை குடும்பத்தில் நாம் ஏற்றுக்கொண்டால் அன்பு மாதிரி நிறைய பேர் முன்னேறி வருவதை நாம் சமுதாயத்தில் பார்க்க முடியும் என்றார்.

பேட்டிகள்:

1.அன்பு ரூபி- திருநங்கை
2.தேன்மொழி_திருநங்கையின் தாய்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.