ETV Bharat / state

வெளிநாட்டுப் பயணிகளின் ஜாலியான பொங்கல் கொண்டாட்டம் - தூத்துக்குடி வெளிநாட்டவர் பொங்கல் கொண்டாட்டம்

தூத்துக்குடி: இங்கிலாந்து, இத்தாலி, செக்கோஸ்லோவியா உள்ளிட்ட வெளிநாடுகளிலிருந்து இந்தியா வந்த சுற்றுலாப் பயணிகள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடினர்.

in-thoothukudi-foreigners-celebrated-pongal-festival
தூத்துக்குடி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் ஜாலியான பொங்கல் கொண்டாட்டம்
author img

By

Published : Jan 6, 2020, 2:06 PM IST

தமிழர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா வருகிற 14ஆம் தேதி வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட உள்ளது. ஆண்டுதோறும் பொங்கல் விழாவை முன்னிட்டு தனியார் அமைப்பின் சார்பில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் தமிழ்நாட்டில் சுற்றுலா வருவது வழக்கம்.

அதன்படி இந்தாண்டு இங்கிலாந்து, இத்தாலி, செக்கோஸ்லோவியா, ஹங்கேரி, துருக்கி, சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இரண்டு பெண்கள் உள்பட 11 பேர் கொண்ட குழு சுற்றுலா வந்திருந்தது. அவர்கள் ஆறு குழுக்களாக சென்னையிலிருந்து ஆட்டோ மூலமாக ஒவ்வொரு ஊராக சுற்றுலா வந்து தமிழ்நாட்டிலுள்ள சுற்றுலா இடங்களை ரசித்தனர்.

தங்களின் அனுபவத்தை பகிர்ந்துகொண்ட வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள்

சென்னை, காஞ்சிபுரம், பாண்டிச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் ஆகிய ஊர்களின் வழியாக வெளிநாட்டுச் சுற்றுலா குழுவினர் தூத்துக்குடி வந்து சேர்ந்தனர். அங்கு தனியார் பழத்தோட்டப்பண்ணையில் ஏற்பாடு செய்திருந்த பொங்கல் விழாவில் கலந்துகொண்டு பொங்கலிட்டு மகிழ்ந்தனர். இதில் ஆண்கள் வேட்டி அணிந்தும் பெண்கள் சேலை அணிந்தும் பொங்கல் விழாவில் கலந்துகொண்டனர்.

தூத்துக்குடியில் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் பொங்கல் கொண்டாட்டம்

இதுகுறித்து வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் கூறுகையில், "தமிழ்நாட்டின் கலாசாரம், பழக்கவழக்கம், பாரம்பரியம் என அனைத்தும் மிகவும் பிடித்துள்ளன. இங்குள்ள மக்கள் கனிவுடன் உபசரிக்கின்றனர். இதுபோன்ற வரவேற்பை நான் எங்கும் கண்டதில்லை. முதல்முறையாக சுற்றுலா வந்த எங்களுக்கு நல்ல அனுபவம் கிடைத்திருக்கிறது. இன்று நாங்கள் கொண்டாடும் இந்தப் பொங்கல் விழா எங்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. எங்களது சுற்றுலாவை நாங்கள் திருவனந்தபுரத்தில் நிறைவுசெய்ய உள்ளோம்.

இந்தச் சுற்றுலாவில் ஆட்டோ ஓட்டுவது என்பதுதான் எங்களுக்கு கொடுக்கப்பட்ட சவால். சவாலுடன் கூடிய சுற்றுலாப் பயணம் மிகவும் புதுவிதமான அனுபவத்தை தந்துள்ளது. போக்குவரத்து நெரிசல், கூட்ட நெரிசல், கிராமங்கள், நகரங்கள் வழியாக வாகனங்களை ஓட்டுவது மிகவும் சிரமமான விஷயம். இவை அனைத்தையும் தாண்டி மிகவும் மகிழ்ச்சிகரமான சுற்றுலாவாக இது அமைந்தது" எனக் கூறினர்.

இதையும் படியுங்க: ’பொங்கல் பரிசு விநியோகத்தில் தவறு ஏதும் நடைபெறாது’ - செல்லூர் ராஜூ

Intro:தூத்துக்குடியில் வெளிநாட்டினர் கொண்டாடிய இனிப்பு பொங்கல்

Body:தூத்துக்குடியில் வெளிநாட்டினர் இனிப்பு பொங்கல் வைத்து கொண்டாடி மகிழ்ந்தனர். இந்த செய்திக்கான வீடியோ பேட்டி இணைக்கப்பட்டுள்ளது பயன்படுத்திக் கொள்ளவும்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.