ETV Bharat / state

தூய்மை பணியில் ஈடுபட்ட காவலர்கள்!.. மன நெகிழ்ச்சியில் பொதுமக்கள்..!

author img

By

Published : Apr 9, 2023, 7:25 PM IST

ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சி பகுதியில், பேரூராட்சி பணியாளர்களோடு இணைந்து காவல்துறையினர் தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியில் ஈடுபட்ட காவலர்கள்!..மன நெகிழ்ச்சியில் பொதுமக்கள்

தூத்துக்குடி: தூய்மை, வளமை அதுவே ஸ்ரீவைகுண்டம் நகரின் பெருமை என்ற நோக்கத்தை நிறைவேற்றும் விதமாக பல்வேறு தூய்மை பணிகளும், சுகாதார பணிகளும் ஸ்ரீவைகுண்டம் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக இன்று ஸ்ரீவைகுணடம் பேரூராட்சி நிர்வாகத்தினரோடு இணைந்து ஸ்ரீவைகுண்டம் காவல்துறையினர், ஸ்ரீவைகுண்டம் 3-ஆவது மற்றும் 4 ஆவது வார்டு பகுதிகளில் தூய்மை பணியில் ஈடுபட்டனர். இந்த பணிகளை ஸ்ரீவைகுண்டம் காவல் ஆய்வாளர் அன்னராஜ் துவங்கி வைத்தார்.

ஸ்ரீவைகுண்டம் சிவகாமி அம்மன் கோயில் தெரு, மகாதேவர் கோயில் தெரு, சிவன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை ஓரங்களில் இருந்த காட்டுச் செடிகள், கருவேல மரங்கள் மற்றும் குப்பைகளை காவல்துறையினரும் பேரூராட்சி பணியாளர்களும் அகற்றினர். பேரூராட்சி தலைவர் சினேகவள்ளி, துணைத் தலைவர் கன்னியம்மாள், கவுன்சிலர்கள் சங்கரி, முத்துலெட்சுமி உட்பட வியாபாரிகள் சங்கத்தினர் மற்றும் மக்கள் நல சங்கத்தினரும் இணைந்து தூய்மை பணியில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க: பிரதமர் மோடியின் அட்வென்சரஸ் பயணம்.. முதுமலையில் ஆஸ்கர் தம்பதியுடன் உரையாடல்!

நவதிருப்பதி கோயில்களில் முதலாவது கோயிலான ஸ்ரீவைகுண்டம், கள்ளபிரான் கோவிலில் சித்திரை திருவிழா வருகிற ஏப்ரல் 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி ஏப்ரல் 19 ஆம் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. இதைப்போல், நவகைலாய கோயில்களில் ஒன்றான ஸ்ரீவைகுண்டம் கைலாசநாதர் கோயிலில், சித்திரை திருவிழா ஏப்ரல் 25 ஆம் தேதி தொடங்கி மே 4 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்நிலையில், ஸ்ரீவைகுண்டத்தில் தொடங்கப்பட்டுள்ள மெகா தூய்மை பணி பொதுமக்களுக்கும் பக்தர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: தமிழ்நாடு முழுவதும் 76 இடங்களில் 15ஆம் தேதி ரயில் மறியல் போராட்டம் - கே.எஸ். அழகிரி அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.